பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


இன்பத் தீபாவளி

'காசைக் கரைக்கும் தீ பாவளி' காணெனக்
கவலைப் படுபவராய்த் - தந்தை
ஏசித்தன் கையினில் காசு காணாமலே
இன்னலுற் றரெனினும் - என்றன்
ஆசைக் கணவனும் நேசமாய் வந்தெனக்
காறுதல் செய்ததனால் - தோழி !
வாசமலர்களில் வீசும்தென றல்லெனும்
வண்ணம் இனிக்குதடி !

'சீவனை வாங்கும்தீ பாவளி' சேர்ந்தெனச்
சிந்தையும் நொந்தவராய்த் - தந்தை
நோவது வாகியே ஆவி பதறவே
நொந்து குலைத்திடினும் - நோகா
தாவலு டன்சொந்தக் காவலன் வந்தென்
அகங்குளிர் வித்தனால்-தோழி
கூவும் குயில்கிளி மேவிடும் சோலைக்
குதுகலம் கூடுதடி !

'தொந்திர வானதீ பாவளி' தானெனச்
சொல்லி யலுத்தவராய்த் - தந்தை
சிந்தனையோடு செயல்தடு மாறியே
சீரழி வெய்திடினும் -இன்று
சுந்தர னாகிய என்பதி வந்து
சுகத்தை யளித்ததனால் - தோழி !
மந்திர மோதியே மாங்கனி வீழ்த்தும்
மகிழ்ச்சியுண் டாகுதடி !

'சிந்தியா தார்க்குத்தீ பாவளி' தானெனச்
சீற்றம் மிகுந்தவராய்த் தந்தை
நிந்தியா நின்றுதம் நெஞ்சு வருந்தியே
நெட்டுயிர்ப் பெய்திடினும் - இன்று

180