பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆய்வை வெளிப்படுத்தினால், அந்நன்றியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஒரு சாதாரண மனிதன் அல்லது ஒரு கவிஞன் வறுமையால் வாடலாம். அல்லது சாகலாம். ஆனால் அவனின் இலக்கியங்கள் செத்து விடக்கூடாது. ஏனெனில் அவன் அதற்காகக் கொடுக்கும் விலை, விலைமதிப்பற்றது என்பதைக் கலைஞரைப் போன்று தமிழைக் கரைத்துக் குடித்து எழுதி, திளைத்து உணர்ந்து மகிழ்ந்தவர்கள் அறியாததா? அவர்களே உண்மைக் கவிஞர்களைக் கண்டு கொள்ளவில்லையென்றால், தமிழை யார் கண்டு கொள்வார்கள்? கவிதைகளை அனைவரும் படித்துச் சொல்லட்டும் என் தந்தையின் நூல்கள் நாட்டிற்கு பயன்படுமா.இல்லையா என்று.

உண்மையின் உயர்வைப் பாமரர்கள் அறியாது இருப்பது இயல்பு. ஆனால் இலக்கிய வாதிகளும் அதை அலட்சியப்படுத்தினால் சத்தியம் செத்துவிடாதா? நாடு நாறிவிடாதா? பிறகு எங்கே எதைச் செம்மைப்படுத்துவது?

குஜராத்தில் மீன் பிடிப்பவன் ஒருவன் உப்பிட்டுக் காய வைத்த மீன் துண்டுகளைக் காக்கைகள் எடுத்துச் செல்லாமல் இருக்க, சில மீன்களை விஷம் தோய்த்து வீசினானாம். பொத், பொத்தென்று பல காக்கைகள் இறந்து விழுந்தன. மீன் பிடிப்பவனுக்குச் செம மகிழ்ச்சி. எப்போதும் போல் வலையோடு மீன் பிடிக்கச் சென்றான். ஆனால் எல்லாக் காகங்களும் ஒன்று சேர்ந்து அவனைச் சல்லடைக் கண்களாகக் கொத்திக் குதறிவிட்டன! அன்று மட்டுமல்ல, எப்போது வெளியே வந்தாலும் அவனை விரட்டத் தொடங்கின. அவனும் பிறகு நல்ல மீன்களைப் போட்டுப்பார்த்தான். அவற்றை அவை திரும்பியும் பார்க்கவில்லை.காகங்கள் தன் இனத்தை அழிக்க முயன்றவனை அழிக்கத் தொடங்கிவிட்டன - என்பன தினமலரில் நான் படித்த வரிகள்.

ஐந்தறிவு படைத்த காக்கைக் கூட்டத்தின் முன், மனித இனம் தோற்றுப் போவதா? அதன் ஒற்றுமையின் முன் நாம் பின்னடைவதா? இல்லை இல்லை ! நண்பர்களே, நாம் வெற்றிப்

61