பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


அடிமையாக மாட்டேன்


அடிமை யாக மாட்டேன் - எவர்க்கும்
அடிமை யாக மாட்டேன்
அடிமை யென்ற ழைத்தே - என்னை
அடிமை செய்த போதும்.

அடிமை யாக மாட்டேன் - எவர்க்கும்
அடிமை யாக மாட்டேன்
உடைமை யுள்ள தெல்லாம் - விற்றென்
உருக்கு லைந்த போதும்.

அடிமை யாக மாட்டேன் - எவர்க்கும்
அடிமை யாக மாட்டேன்
குடிமை குன்றி நாளும் - பழைய
கூழ் குடித்த போதும்.

அடிமை யாக மாட்டேன் - எவர்க்கும்
அடிமை யாக மாட்டேன்
மடமை கொண்டு வந்தென் - உரிமை
மறுதளித்த போதும்.

அடிமை யாக மாட்டேன் - எவர்க்கும்
அடிமை யாக மாட்டேன்
கடமை செய்வதற்கும் - இயலாக்
கடைய னாக்கும் போதும்.

அடிமை யாக மாட்டேன் - எவர்க்கும்
அடிமை யாக மாட்டேன்
கொடுமை கோடி செய்து - என்னைக்
கொன்று விட்ட போதும்.

72