பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

ஒன்றுபடல்

நாடும் நகரும் நன்றென் போமினி
நாயகர் நாமென்போம் ! - நம்
விடும் வெளியும் ஒன்றென் போமினி
வேற்றுமை போமென்போம் !

நீயும் நானும் நேரென் போம்நன்
னெறிதனை நீங்காதே - கருக்
காயும் நாளைக் கனியென் போம்காய்
கவர்வதற்கேங்கா தே !

உழவும் தொழிலும் ஒன்றென் போமதன்
உறவினை ஒளிக்காதே!பே
ரழிவும் அழலும் அன்றென் போமினி
யதற்கிட மளிக்காதே !

தாழ்வும் உயர்வும் தவறென் போமது
தவிர்ப்பது கடனென்றே ! - இனி
வாழ்வில் வறுமை வசையென் போமது
வளர்ப்பது மடமென்றே !

எண்ணா ரீயும் இடும்பைக் கிடமிங்
கிலையென் றெதிர்க்கேமோ? - எம்
கண்ணிரேசெங்கதிரவ னெனலிெங்
கனலை யுதிர்க்கே மோ?

காயும் வெயிலைக் கடிந்திடு மோபயிர்
கலந்துற வாடிடுமோ? - பின்
பாயும் புனலிற் படிந்திடு மோபயிர்
பரிந்துற வாடிடுமோ?

அறிவும் திறமும் அரசா யரணாய்
ஆட்சியி லமர்ந்திடவே - நல்
லுறவும் மறமும் உருவா யுறுப்பா
யுலகு மலர்ந்திடுமே !

77