பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

தலைமை

ஒன்று கூறுகின்றேன் - முற்றும்
உண்மையான வார்த்தை !
நின்று சற்று நீங்கள்- கேட்டு
நேர்ந்து கொள்ள நெஞ்சில் !

இன்று நேற்றொ பன்று - நன்றாய்
 எண்ணி நோக்கு வோமேல்
தொன்று தொட்டு நம்பங்-கிற்குத்
துன்பம் மட்டு மேதான் !

செல்வ மென்ப வெல்லாம் - சிலரே
சேர்க்கு மாறு செய்தார் !
கல்வி யென்ப வெல்லாம்-சிலரே
கற்கு மாறு வைத்தார் !
கொல்வ போன்றெ மக்கேன்-இந்தக்
கொடுமை யென்று கேட்டால்
தொல்வி னைப்பயன்தான்-தொடர்ந்து
துய்க்க வேண்டு மென்பார் !

அன்பி லாத பேச்சு - வாழ்வே
அவல மாகிப் போச்சு!
என்பு தோலு மாச்சு - உடலில்
இருப்ப தோய்ந்த மூச்சு !
துன்ப மென்னுமதனை - இனிநாம்
எய்த வேண்டு மாயின்,

குலைய நின்ற வாழ்வை - ஒன்று
கூட்டி வைக்க வல்லோன் ;
மலைக லங்கினாலும் - துளியும்
மனங்க லங்கி டாத
கலைஞ ணாயியிருந்து - வாய்மை
கண்டறிந்து கொள்வோன்
தலைவ னென்று ரைப்பேன் ; - அவனைத்
தான றிந்து கொளவே !

85