பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்



கந்தலுங் கூளமும்


'இந்த இளைஞன் இயம்புவ'
தென்னடி தோழி ! - இங்கே
ஏழைக ளும்இனி வாழட்டும்
என்கிறான் தோழா !'ஓ கோ !
தொந்தர வைத்தொலைத் தோமெனச்
சொல்லடி தோழி - 'தூ தூ
தொல்லை தொடுக்கச் சுயநலம்
முந்துது தோழா !' - அந்தோ!
கந்தலுங் கூளமாய்க் காணப்
படுகிறோம் தோழி - இந்தக்
கதியற்ற நிலைமைக்கு காரணம்
கண்டறி தோழா !

'மந்திரப் பேச்சை மறுப்பவர்
யாரடி தோழி ! - இங்கே
மக்க ளுழைப்பினில் முக்குளிப்
போர்சிலர் தோழா ! நன்கு
சிந்தித்து நல்லது செப்புவோ
ரில்லையா தோழி ! - முன்பே
செல்வர் வலைகளில் சிக்கிவிட்
பாரவர் தோழா ! - அந்தோ
கந்தலுங் கூளமாய்க் காணப்
படுகிறோம் தோழி - அந்தக்
காரணம் நீக்கிடும் கட்சியைக்
கானடா தோழா ! -

தந்திரந் தன்னில் தலைசிறந்
தாரெவர் தோழி ! - இங்கே
தாழ்ந்தவர் பாட்டில் தழைக்கும்
தனஞ் செயர் தோழா ! - இந்தச்

97