பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் கின் ருர். மாயையாம் பொய்ப் படையற்று, மாருத பேரின்ப உலக ஆட்சிக்கு உயிர்களைத் தயார் செய்து கொள்ளத் தூண்டுவதை அவர் வாக்கிலேயே காணலாம். ஞானவா ளேந்துமையர் நாதப் பறையறைமின் மானமா ஏறுமையர் மதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்.காம் மாயப்படை வாராமே (46-1). தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்கள் சூழப்போகீர் ஒண்டிறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்டிறல் சித்தர்களே கடைக்கூழை சென்மின்கள் அண்டர்கா டாள்வோம்நாம் அல்லற்படை வாராமே (46-2). இவற்றைப் பார்க்கும் அடிகளார் முதலமைச்சராக இருந்தது மட்டுமன்றி, போர்ப்படை அமைச்சராகவும். தளபதியாகவும்கூட இருந்தாரோ என நினைக்க வேண்டி உள்ளது அல்லவா? இவ்வாறு போர்ப்படை திரட்டும் பேரரு ளாளராகிய மாணிக்கவாசக அடிகளார் காலம் கருதி வினை முடிக்கும் செயல் வல்லவர் என்பதை மற்ருேர் இடத்தில் அவரே விளக்குகிருர். ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின்’ என்ற அரசியலில் கைவரப்பெற்றவ ரன்ருே அடிகளார்? அவ்வரசியல் நெறியை இறைவன் அருளியல் நெறியினும் பெய்து காண்கின்ருர். இறைவன் அருளாளனுக வந்து, தாமே ஆண்டுகொண்டு அருளும் காலத்தில் நாம் வாளா இருந்தால் பயன்பெற முடியாது என்றும் உயிர்கள் அக்காலங் கருதிக் காதல் செய்யின் அரி யொடு பிரமற்கு அளவறியாத அத்தடங்கருணைப் பெருங்: கடல் அஞ்சலென அருள் செய்யும் என்றும் காட்டும். வகையில், காலமுண் டாகவே காதல்செய்து உய்மின்கள் கருதரிய ஞாலமுண் டாளுேடு நான்முகன் வானவர் கண்ணரிய