பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் காத்தும் படைத்தும் கரக்கும் இறை நிலையினையும் அவ் விரண்டுக்கும் உள்ள பெரு வேறுபாட்டினையும் உணர்ந்து இறை உணர்வுகொள்ள வேண்டும் என்பதே அவரது அவா. இதுபற்றி முன்னரே நான் வேருெரு நூலில் விளக்கியுள்ளே தைலால் ஈண்டு அதிகமாகக் காட்ட விரும்பவில்லை. அவ் வடிகளை மட்டும் உங்கள்முன் வைத்து மேலே செல்கின் றேன். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருங் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்ருெரு கோடியின் மேற்பட விரிந்தன இல் நுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் (3, 1-6) என்று அவர் இந்த அண்டகோளங்கள் அத்தனையும் உள்ள டக்கிய பேரண்டம் வீட்டு முழையில் காணும் சிறு அணுவை ஒத்தது எனக் காட்டி மிகச் சிறியனவாகிய இப் பேரண்டங் கள் எண்ணற்றன இருக்க, இவையெலாம் கடந்து அப்பாலுக் கப்பாலாக உள்ள பெரியோன் இறைவன் என்கிரு.ர். ஆம்! அதே இறைவன்தான் மெய்யடியவராகிய தம்பொருட்டு மதுரை மாநகரில் மெய்யுருக்காட்டி விளையாடினர் எனவும் குறிக்கின்ருர். இந்த அடிகளில் உலகம் உருண்டை என்ற அறிவியல் ஆய்வையும் அன்றே இவர் விளக்கியிருக்கும் தன்மை வியக்கற்பாலது ஆகும். இவ்வாறே உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆகிய தன்மையினையும் அவை ஒன்றனுள் ஒன்று அடங்கி, இறுதியில் பரம ஆகாயத்தில் இரண்டறக் கலந்து நிற்கும் தன்மையினையும், அப்பஞ்சபூத ஒடுக்கம் எப்படிப்பட்டது. என்பதையும் எவ்வாறு அடங்குகின்றன என்பதையும் விளக்கிக் காட்டுகின்ருர். பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி