பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வெள்ளிவிழாச் சொற்பொழிவுக்ள் வழியே உவமைகளும் சொல்லமைதிகளும் பழமொழிகளும் பிறவும் சிறக்க அமைந்து இலக்கிய மரபால் என்றும் அவர் பாடல்கள் வாழும் என்பதையும் உணர்ந்தோம். மேலும் அவரது அஞ்சா நிலையையும் ஆண்டவன் அவரை ஆட் கொண்ட வகையினையும் அவர் இறைவனைக் காலமாகவே கண்டதையும் ஒரளவு உணர்ந்தோம். அவரது அறிவியல் உலகியல் நெறிகளின் சிறப்பினை ஒர்ந்தறிந்தோம். அவர் பற்றற்று வாழ்ந்த நிலையில் அப்பற்றற்ற வாழ்வு வெறும்துற வில் மட்டும் இல்லை என்பதையும் உயிர்களைப் பெண்களாக்கி உபதேசம் செய்த வகையினையும் காண்டோம். இறுதியாக அவர் தம்மை மறந்த நிலையில் ஆண்டவனிடம் தம்மை எப்படி முற்றும் அடைக்கலப் பொருளாக்கி அனைத்தையும் அவ னுக்கே உரிமையாக்கினர் என்பதையும் அதுவே மேலான தெய்வநெறி என்பதையும் கண்டோம். தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை எனத் தம்மையே பண்டமாற்றுப் பொருளாக்கித் தம்மை மறந்து அவனருளாலே அவன் தாள் வணங்கிய மணிவாசகர் தாம்மட்டுமன்றி உலகத்தார் அனை வரையும் சேர அழைத்துச் செல்ல விரும்பியதையும் உணர்ந் தோம். நானும் அந்நல்ல நெறிக்கு அனைவரும் ஒருசேரச் செல்வோம் வாரீர்' என்று கூறி அமைகின்றேன்.