பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அரசர் 123 சொல்இயலும் படைத்தானைக் கொற்ற ஒள்வாள் கோழியர்கோன் குடைக்குல சேகரன் (10-11) என்பன அவர் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்வன. இவற்றின் வழி அவர் நாட்டெல்லையையும் வீரத்தையும் சேனையின் திறத் தையும் நன்கு அறியலாம். இவற்றிற்கெல்லாம் மேலாக அவர் திருமாலிடம் தம்மைப் பறிகொடுத்த நிலையே ஈண்டு நமக்கு வேண்டுவதாகும். குலசேகரர் மட்டுமன்றி வைணவ அடியார்களே இறைவ ைேடு நெருங்கிய தொடர்பு உடையவர்கள். இன்றும் வைண வத் திருத்தலங்களுக்குச் செல்பவர் இந்த உண்மையை நன்கு அறிவர்.திருமால் படிமத்தைச் சீராட்டிப் பாராட்டி உணவூட் டும் முறையை நேரில் காணும் நம்மை நாம் மறப்போம். என் பது உண்மை. அவ்வுணவினை-பழத்தையும் அக்கார அடிசிலை யும் பிறபொருள்களையும் அவன் பவள வாயிடைக் கொண்டு காட்டி உண்ண வேண்டும் திறனை எண்ணுவதா? அவன் சிற்றுலாவுக்கு வெளி வருகையில் அவன்மேல் சிறுதுளியும் வெயிலும் படாதபடி குடைகளாலும் சாமரைகளாலும் மூடிக் கண்ணும் கருத்துமாகக் காக்கும் செயலே எண்ணுவதா? அவனைப் பல வகையில் அலங்கரித்து அவன் தோற்றத்தில் தம்மை மறந்து-பக்தி வலையில் படும் அவனை நினைத்துபரவசப்படும் பான்மையை எண்ணுவதா? உண்மையில் வைணவக் கோயில்களில் உருக்கமும் தம்மை மறத்தலும் இன்று காணக் கூடியவைதாம். குலசேகரர் தம்மைப் பேரரசர் என்பதையும் மறந்து இறைவனைப் பல வகையில் வழிபடுகிருர். ஒவ்வொரு பதிகத்தின் கடைசியிலும் தம்மை அரசர் என்று அவர் கூறிக் கொண்டாலும் பாடல்களுக்கிடையிலே அவர் தொண்டராகமெய்யடியாராக- குழந்தையாக-தாயாகத் தான் காட்சி தருகின்ருர். அவரால் பாடப் பெற்ற தலங்கள் நான்கே. அரங்கமும்,வேங்கடமும், வித்துவக்கோடும், தில்லைத் திருச்சித் திரகூடமும் இவர் பாடல்வழி ஏற்றம் பெறுகின்றன. அரங்