பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் கத்துக்கு மூன்றும் மற்றவைகளுக்கு ஒவ்வொன்றுமாகப் பதிகங்கள் அமைந்துள்ளன. அகப்பொருள் துறையில் "கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல் என்ற தலைப்பில் ஒரு பதிகமும் உளது. 'தான் தாலாட்டக் கொடுத்து வைக்க வில்லையே எனத் தேவகி புலம்புவதுபோல் பதிகம் ஒன்றும், இராமனைத் தாலாட்டும் பதிகம் ஒன்றும் தயரதன் புலம்ப லாகப் பதிகம் ஒன்றும் உள்ளன. எனவே இவர் பதிகங்களை இவ்வகையில் எளிதாகப் பகுத்துவிடலாம். எனினும் அவற்றுள் மிகவும் கருத்துக்களையும் கசிந்துருகும் நிலைகளையும் காண நாம் அகத்தையும் புறத்தையும் தூய்மையாக்கிக் கொள்ளவேண்டும். திருவரங்கம் வைணவர்களுக்குக் கோயிலாகத் திகழ் வது அன்று. சைவர்கள் கோயில்’ என்ருல் சிதம்பரத்தைக் குறிக்கும் என்பர். அது போன்றே வைணவர்கள் கோயில்’ என்ருல் திருவரங்கத்தைக் குறிக்கும் என்பர். அத்திருவரங்கப் பெருமானிடம் ஈடுபடாத-பாடாத- அடியவர் இல்லை. ஆண்டாள் அரங்கனுக்கல்லால் வாழ்க்கைப் படேன்’ என்று கூறி, அவனுக்குத் தம்மை உரிமையாக்கிக் கொண்டார். நம் ஆழ்வார் குலசேகரரும் அதே நிலையில் அரங்கத்தே தம்மை மறந்து, தம்மைத் திருவரங்கநாதன் திருவடிகளுக்கு அடிமை யாக்கிக் கொள்ளுகின்ருர். உலகில் பிறந்ததால் உண்டாகிய பயனை உற்று அறிபவர் மிகச் சிலரேயாவர். 'வந்தது எதற்கு? வாழ்வது எதற்கு? என்ற விளுக்களுக்கு விடைகாண்போர் மிகச்சிலரே. அடிய வர்கள், கண் அவனைக் காண்க இருகா தவனைக் கேட்கவாய் பண் அவனைப் பாடப் பதஞ்சூழ்க என்பர். இறைவனைப் பாடவும், காணவும், எண்ணவும்,எழு தவும் பயன்பட வேண்டும் என்பர். இதன் அடிப்படை, படமா டும் இறைவனைப் பாடுவதோடு நடமாடும்.கோயில்களாகிய