பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மற்ந்த அடியவர்-அரசர் 125 உயிர்களையும் போற்ற வேண்டும் என்பதாகும். இங்கே குல சேகரர் அரங்கப் பெருமானைப் பாடுமுகத்தால் தம் உடல் பொருள்ஆவி மூன்றையும் அவனுக்கு உரிமையாக்குகின்ருர். எனவே அவருக்கென ஒன்றும் இல்லையாகின்றது. இந்த நிலையை அவரே காட்டும்போது நம்மை நாமும் மறக்கிருேம். க்ருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டென் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே என்றும், மாயோனை மனத்துணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே அம்மான்றன் அடியிணைக்கீழ் அலர்களிட்டு அங்கு அடியவரோ டென்றுகொலோ அணுகு நாளே என்றும், கோவினை காவுறவழுத்தி என்றன் கைகள் கொய்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே என்றும், மாலோனைக் கண்டின்பக் கலவி எய்தி வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே என்றும், பேராழி அம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தே என்றுகொலோ புரளும் நாளே என்றும் தாம் திருவரங்கத் திறைவனோடு என்று இயையப் பெறுவது என ஏங்குகின்ருர். இவை யாவும் அப்பாடல் களின் இறுதி அடிகள். இவ்வடிகளில் ஒவ்வொன்றிலும் இவர்