பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அரசர் 133 கொண்டு ஒறுத்தாலும் அன்றி ஒதுக்கினலும் தாம் அவனை விட்டுச் செல்ல இயலாது என்பதை நன்கு விளக்குகிருர் நாட்டை ஆளுகின்ற மன்னன் தவறிழைக்கின்ருன்; குடிகள் துன்புறுத்தப் பெறுகின்றனர். எனினும் அவர் களுக்குப் புகலிடம் ஏது? அவன் கோல் செம்மையாகாதா ? நலம் விளையாதா? என்றே அக்குடிகள் அவனை நோக்கி நிற்பது உலகியல். உயிராகிய குடியும் தன்னை ஒறுக்கின்ற ஒருவகிைய இறைவன் என்றேனும் மனம் திரும்பித் தன்னை ஆட்கொள்ள மாட்டான என்று அவாவும் பெரு நிலையை ஆழ்வார் நன்கு காட்டுகின்ருர். ஒரு கப்பல்; கரையில் இருக்கும்போது ஒரு காகம் அதன் பாய் மரத்து உச்சியில் உட்கார்ந்து கொள்கிறது; தன்னை மறக்கிறது. கப்பல் நடுக் கடலில் சென்ற பின் தரையில் பல விடங்களுக்குப் பறப்பதுபோல் வேறிடம் நாடுகிறது. எங்கே செல்ல முடியும்? எங்கும் கடல்-நீர்-நிலம் ஏது ? பறந்து பறந்து திரும்பத் திரும்ப அதே கப்பலின் கூம்பில்தான் வந்து தங்குகின்றது. இஃது உலகியல். உயிராகிய பறவை உலகப் பெருங்கடலில் எங்கெங்கோ தாவலாம் என முயல் கின்றது. ஆனல் அது தங்க இடம் ஏது. மனித குமார னுக்கோ தலை சாய்க்க இடமில்லை' என்று இயேசு பெருமான் சொல்லவில்லையா? எனவே திரும்பத் திரும்ப இறைவனையே அவ்வுயிராகிய பறவை சேர்கிறது என்கின்ருர் ஆழ்வார். காதலன் காதலியை மண ந்துகொண்டான்.வாழ்கின்றன் பின் மாறுபடுகின்ருன். மனைவியை வைகிருன்; வாட்டு கிருன்; வருத்துகிருன். ஆனால் நல்ல குலமகள் அவற்றிற் கெல்லாம் உடைந்து காதலனை விட்டுச் சென்று விடுவாளோ? விடமாட்டாள்-இஃது உலகியல்-உயிராகிய காதலி தலைவ கிைய இறைவனுக்கு அடைக்கலமாகின்றது. ஆனால் பின் தலைவன் அடித்தடித்து'ச் சோதனை செய்கின்ருன். இச் சோதனைகளுக்கு அஞ்சி அவ்வுயிர் இறைவனவிட்டுச் செல் லாது என்பதை நன்கு விளக்குகின்ருர் ஆழ்வார்.