பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர-அரசர் 139 மலையதல்ை அணைகட்டி மதில் இலங்கை அழித்தவனே அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே - (3 - 8) என்றும் பாடிப் பாடித் தாலாட்டுகின்ருர் ஆழ்வார். அதை ஒட்டி அடுத்துவரும் பதிகத்தே ஆழ்வார் தம்மைத் தசரத னுக்கிக் கொள்ளுகிருர். தசரதன் இராமன் பிரிவால் என் வெவ்வாறு வருந்தினன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது அவர் உள்ளம் துண் என்கின்றது-வாய் வெடிக்கிறதுவார்த்தை உருவாகிறது-பாட்டுப் பெருகி வருகிறது. வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருகிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிருெழிந்து தேரொழிந்து மாவொழிந்துவனமே மேவி நெய்வாய வேநெடுங்கண் கேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையெம் இராமாவோ எம்பெருமான் என்செய் கேனே (9 - 9) என்றும், மெல்லணை மேல் முன்துயின்ருய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் கீழற் கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ! காகுத்தா கரிய கோவே (9 - 3) என்றும், பூமருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்துபூந் துகில்சேர் அல்குல் காமரெழில் விழல்உடுத்துக் கலனணியா தங்கங்கள் அழகு மாறி