பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் ஏமருதோள் என்புதல்வன் யான் இன்று செலத்தக்க வனந்தான் சேர்தல் தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே (9 - 7) என்றும், என்னையும் என்மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய் கின்னேயே மகளுகப்பெறப் பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுங்தோள் வேங்தே (9 - 9). என்றும், தசரதன் வாய்விட்டுக் கூருததை எல்லாம் தாம் வாய் விட்டுக்கூறி, ஆழ்வார் தம்மை மறந்து பாடுகின்ருர். இதே இராமாயண அடிப்படையில் தமது கடைசிப் பதி தத்தையும் பாடி முடிக்கின்ருர் குலசேகரர். தில்லைத் திருச் சித்திரகூடத்து இறைவனைப் பாடுமுகத்தான் இராமாயணத், தையேமுறைப்படுத்திக்காட்டுகிருர் ஆழ்வார்.இராம சரிதம்’ என்றே அதற்குத் தலைப்பும் உள்ளது. பாடல்களின் முற்பகுதி அனைத்தும் இராமனைக் குறிக்க, பிற்பகுதி திருச்சித்திரகூடத். தையும் ஆழ்வார் வேண்டுகோளையும் காட்டுகின்றது. மேலே கண்ட முன்னைய பத்தினும் இப்பத்துப்பாட்டில் தெளிவாக, வும் விளக்கமாகவும் முழு இராமயாணத்தை ஆழ்வார் பாடி முடித்துத் தமக்கு வேண்டிய வரத்தையும் கேட்டுக்கொண்டு, உலக மக்கள் அவனையும் எப்பொழுதும் இறைஞ்ச வேண்டும் என்று வேண்டி முடிக்கின்ருர் ஆழ்வார். முந்தைய பாடல்களி லெல்லாம் அவனைக் காணப் பெறும் பேறுபற்றியும் அவன் உயர்நிலையினையும் தம் உள நிலையையும் உற்ருர் பெறும் பயனையும் காட்டி, இறுதியில் அவன் வைகுந்தம் சென்ற: சிறப்பையும் அவனை உலகம் வணங்கவேண்டிய இன்றியமை யாமையையும் கூறி மங்கள வேண்டுகோளோடு முடிக்கின் ரூர். நானும் அவ்வாறே அவர் பாடலை முன்வைத்து விடை பெறுகின்றேன்.