பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதி-என்றும் வாழும் கவி 143 தம்மை வாழவைத்து நிற்பர்; அப்படியே அத்தகைய நல்லவ ரோடு தொடர்பு கொண்ட அனைத்தும் காலத்தை வென்று வாழும். இக்கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கமும் அந்த வகையைச் சார்ந்ததே. இது இன்று வெள்ளிவிழாக் கொண் டாடுகின்றது. இதுதொடக்கவிழா;இதுபோன்றே பல விழாக் கள் பல நூற்ருண்டு விழாக்கள் நடைபெறும்-நடைபெறும் நிலையில் நாட்டில் இச் சங்கம் தமிழர்தம் மொழி, கலை, பண் பாடு, நாகரிகம் அனைத்தையும் விளக்கும் ஒளிவிளக்காக விளக்கமுறும் என்பது துணிவு. விளக்கம் பெறுக என நானும் நல்லவரோடு வாழ்த்துகிறேன். இவ்வெள்ளி விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த இப்பாரதி தமிழ்ச்சங்கத்தாருக்கு என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இச்சங்கம் பாரதியின் பேரால் அமைந்துள்ளது. முதற் பொருளாம் பாரதியைப் பற்றி முதலில் கண்டோம். அதே சிறப்புப் பெயரை வாழ்விடைத் தாங்கிய நல்லவர் சிலர். அவருள் தலையாயவர் இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் தம்மிடை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியாராவர். அவர் அன்று மட்டும் வந்தவரல்லர்-என்றும் வாழ்கின்ற இறவாத கலைஞர் அவர் என்பதை உலகறியும். அவரது புகழ்பாடும் இப்பாரதி தமிழ்ச் சங்கத்தார் அவரைப் பற்றிய பேச்சினைஇவ்வெள்ளிவிழாப் பேச்சு வரிசையில் முதலாவதாக-அதிலும் ஆங்கிலத்தில் அமைத்திருப்பது சாலச் சிறந்த ஒன்ருகும். பாரதி யார்? அவர் எப்படிச் சாகா வரம் பெற்ருர்? ஆய்ந்து காண்போம். 1882-இல் தமிழ் நாட்டுத் தென் கோடியிலுள்ள நெல்லை மாவட்டத்தில் எட்டைய புரத்தில் சின்னசாமி ஐயர் இலட்சுமி அம்மையார் இவர்தம் மகளுகப் பிறந்தவர்தாம் பாரதி. இப்பாரதி என்னும் பட்டம் இவருக்கும் பதினேரா வது வயதில் அவ்வூர் சமஸ்தானப் பெரும் புலவர்களால் அளிக்கப் பெற்றது. அக்காலத்திலேயே இவர் சிறந்த கவிஞ ராய் விளங்கினர் என்பது நன்கு தெரிகின்றதன்ருே இள் மையில் தாயை இழந்த இவர் தமிழன்னையினேயே தாயாகக்