பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி-என்றும் வாழும் கவி 151 உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே அதனியல் ஒளிவுறு அறிவாம் அதனிலை கண்டார் அல்லலை அகன்ருர் அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம் என்ற பொதுமை நலப்பாடல் அவரை 'அமர வாழ்வு வாழச் செய்துவிட்டது. 'தன்தெய்வம் என் தெய்வமென்று: தொடர்ந்து எல்லாச் சமயத்தாரும் போற்றும் தெய்வம் அனைத்தும் ஒருவனே என்பதைக்காட்டி அவனே அருட் பெருஞ்சோதியாகிய ஒளிவடிவாம் அருளுருப் பெற்றவன் என்பதையும் விளக்கித் தெய்வநெறிச் சமரசத்தைத் தேடித் தந்தார் பாரதி. அவ்விறைவன் அறிவே வடிவானவன் என்ற உண்மையை வேறு ஓரிடத்தில். ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் டாமெனல் கேளீரோ என உலகமக்களை வலிய அழைத்து, பல தெய்வப் போராட் .டத்தை நிறுத்தி, அறிவொளியாம் ஆண்டவனை ஒன்றியி' .ருந்து காணுங்கள் என உபதேசம் செய்கிருர். அவர்தம் நிலைக்கு அவர், சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளிரோ-பல பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை அழிவீரோ” என இரக்கப்படுகின்ருர். எனவே அவர்தம் தெய்வநெறி 'ஒன்றென்றிரு தெய்வமுண்டென்றிரு’ என்பதாம். இதுவே மனித சமுதாயம் என்றும் ஏற்று நடக்கவேண்டிய தெய்வ