பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்

    வாழ்வு அமைய வேண்டுமென்பதையும் அத்தலைவனும் தலைவி யும் எத்தகைய பண்பாட்டில் சிறக்க வேண்டு மென்பதையும் தொல்காப்பியர் கூறுவர். (இவ்வகப்பொருள் பற்றிய தெளிந்த விளக்கத்தைப் பின் காமமோ பெரிதே' என்ற தலைப்பில் காட்ட இருக்கின்றேன்.) தொல்காப்பியர் காட்டிய தலைவன், தலைவியை நன்கு உணர்ந்து கொள்ளின் அவர்தம் களவிலும் கற்பிலும் ஐயம் ஏற்படக் காரணமே இல்லை. இவ்வகப் பொருளில் வரும் ஒத்த தலைவனும் தலைவியும், என்ற தொடருக்கு உருவு, திரு, ஏர், எழில் இன்ன பிறவற் றில் ஒத்தவர் எனப் பொருள் காட்டுவர் அறிஞர். ஆயினும் அவைகளே எவ்வாறு விளக்க இயலும்? சில ஒப்புமை அளவில் அமையுமேயல்லாது வரையறுத்துக் காட்ட இயலா. சில வற்றைக் குறிப்பாகக் காட்ட இயலுமேயன்றி வெளிப்படை யாகக் காட்ட இயலாது. இவை கேட்போர் அல்லது காண் போர் அல்லது உறுவோர் நெஞ்சு கொள்ளும் வகையில் அமையுமேயன்றி வரையறைக்குட்படா என்ற உண்மை யைத் தொல்காப்பியர்,

ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா

கற்பும் ஏரும் எழிலும் என்றா
சாயலும் நானும் மடனும் என்றா

நோயும் வேட்டையும் நுகர்வும் என்ருங்கு

ஆவயின் வருஉம் கிளவி யெல்லாம் 

நாட்டிய மரபின் நெஞ்சுகொளி னல்லது

காட்ட லாகாப் பொருள வென்ப (பொரு. 53)

என்பர்.

     எனவே இவற்றின் சிறப்பியல்புகள் அகவொழுக்க இன்பத்தை உள்ளத்துணர்வார் உற்று அறிவது போன்று அறிந்து கொள்ளத்தக்கன என்பது தேற்றம்.

தமிழில் அகவாழ்வினையும் புறவாழ்வினையும் திணையின் அடிப்படையிலேயே பிரித்தனர்.முன்சொல்லுக்கு இலக்கணம் காணும்போது உயர்திணை அஃறிணை என்று இருவகையினைக் கண்டோம். ஈண்டு அதன் நிலை பொருள் பொதிந்ததாகும்.