பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் அவ்வாறு பாரதி சாகாதிருப்பதற்குக் காட்டிய வழிகள் தாம் எவை? காண்போமா? தமக்குமுன் வாழ்ந்த மெய்யடி யார் பலரும் அவர் மனக்கண்முன் காட்சியளிக்கின்றனர். ஆதி மூலம் என்றழைத்த யானையும் மார்க்கண்டேயரும் முன் வரு கின்றனர். இந்நிலையில் அவருக்கு மனித உயிருக்கும் பிற உயிர்களுக்கும் வேறுபாடு தோன்றவில்லை. மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்று உலகை ஒத்து நோக்குபவருக்கு எந்த வேறு. பாடும் இல்லையல்லவா?. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினர்’ இராமலிங்க அடிகளார். இருவரும் இறையருளில் மூழ்கி னர்; எனவே இயமன் அவர்கள் அருகில் வர அஞ்சின்ை. தாமும் அந்த மெய் அடியவர் பரம்பரையில் வந்தவர் எனக் கூறி, தம்மிடம் வந்தால் காலன் அழிய வேண்டியதே. ஒழியத் தமக்கு அழிவில்லை எனக் கூறுகின்ருர். காலா உனை நான் சிறுபுல்லென மதிக்கின்றேன்-என்றன் காலருகே வாடா சற்றே உணமிதிக்கின்றேன்-அட (காலா). என எக்களித்துப் பாடுகின்ருர். இந்தப் பெருஞ்செருக்குகாலனையும் புல்லென மதித்து மிதிக்க நினைக்கின்ற செருக்கு பாரதியாருக்கு எங்ங்ணம் வந்தது? அவரே தம் சுய சரிதையில் காட்டுகின்ருர். அவருக்கு அவர் குரு செய்த உபதேசத்தை நமக்குக் காட்டுகின்ருர். அவர் குரு என்ன சொன்னர் ? வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும் தேசுடைய பரிதிஉருக் கிணற்றி னுள்ளே தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய் பேசுவதில் பயனில்லே அனுப வத்தால் பேரின்டம் எய்துவதே ஞானம் என்ருர் அவர் குரு. ஆசி வாசியைக் கும்பகத்தால் அடக்கி: மேனிலையில் நின்றுமண்போலும்மரம்போலும் யான், எனது'