பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் எல்லையைக் கண்டே நாம் அமைதிபெற வேண்டியுள்ளது. அப்படியே எதிரே நமக்குமுன் நிற்பன எத்தனை எத்தனை பேருழிகள் என நினைக்கும்போது நமக்குத் தடுமாற்றந்தான் உண்டாகின்றது. எனவே எல்லையற்ற கால வளர்ச்சிக் கிடையில் ஒரு நொடிப்பொழுதில் வாழ்ந்து கழியும் நாம் இவ் வாழ்வின் அடிப்படையில் அமையவேண்டிய எத்தனையோ முறைகளை எண்ணி எண்ணி அப்பொற் காலத்தை வீணுக்கு கின்ருேம். ஆயினும் அந்த எண்ண அலைகளே மனிதன மனிதனுக வாழ வழிகாட்டுகின்றன. பிற உயிரினங்களிலும் வேறுபட்டவனகிய மனிதன் தன் பகுத்தறிவின் திறத்தில்ை இந்த உண்மைகளையெல்லாம் உணர்ந்துகொள்ளுகின்ருன். அவனது ஆய்வின் திறமே இன்று நாம் இத்துணை வகைகளில் உலகையும் பிற வாழ் வியற் கூறுகளையும் எண்ணிப் பார்க்க வழியும் வகையும் செய் கின்றது. அவ்வாழ்வின் துணைகொண்டு மண்ணைமட்டுமன்றி விண்ண்ேயும் கூட ஆராயத்தொடங்கி விட்டான் மனிதன். நாம் அத்துணைப் பெருநிலையில் செல்லத் தேவையில்லை. எனவே நாம் நம் நல்லறத்தின் அடிப்படையில் தமிழ்ச் சமுதா யத்தின் வாழ்வு, மொழி, கலை, நாகரிகம், பண்பாடு இவற்றின் நேற்றைய வரலாற்றை இன்று ஆராய்ந்து அவை வருங் கால வாழ்விற்கு எவ்வாறு வழிகாட்டியாக அமைவன என் பதை மட்டும் காட்டி அமையலாம். இதன்வழி ஒரளவு உலகச் சூழலையும் உணர்ந்து கொள்ளலாம் என்பதும் உறுதி. தமிழ்ச் சமுதாயம் என்னும்போது நேற்று அது யாதொரு வேறுபாடும் இல்லாமல் வாழ்ந்தது. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பதுதான் அச்சமுதாயத்தின் வாழ்க்கை நெறி. அதில் யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வாழ்வின்அடிப்படையைத்தான் காணமுடியும். அங்கு மனித இனத்தில் மட்டுமன்றி உயிரினத்திலேயே வேறுபாடு காணவில்லை என்பதை முந்தைய பேச்சுக்களில் கண்டிருக்கி ருேம். இந்த உயிரினம் ஒன்றேனும் உயரிய குறிக்கோள் வாழ்வின் அடிப்படைக் குறிக்கோளாக அன்று அமைந்தது.