பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்று இன்று நாளை 175. சியல் மேடைகளாகவும் மாறிப் பல அரசியல் தலைவர்கள் வந்து வந்து பேசும் நிலையில் பணியாற்றுகின்றன. இந்த வகையில் அரசியல் வாடையும் வாழ்வும் பிற கொடுமைகளும் மாணவரிடையில் புகாமல் என்ன செய்யும்? அரசியல் தலை வர்கள்-எந்தக் கட்சியைக் சேர்ந்தவர்களாயினும்-கல்விக் கூடங்களில் கால் வைப்பதில்லை என்று உறுதிபூண்டா லொழியக் கல்விக் கூடங்கள் உருப்படா. அடிமை நாளில் அண்ணல் காந்தி அடிகள் மாணவரையும் உரிமைப் போராட். டத்தில் குதிக்க அழைத்தார் என்ருல், இன்று எதற்கெடுத் தாலும் மாணவர் சமூகமே முதலில் அழைக்கப்பெறுகின்றது. இந்த நிலையில் இன்று மாணவர் உலகில் அமைதி காண்பது எங்கே ? எனவே நாளே உலகாள இருக்கும் இளைஞராக-மாணவ. ராக உள்ள உங்களுக்கு ஒன்றுகூற விரும்புகிறேன். இன் றைய அரசியல் தலைவர் என்ன சொன்னலும் திருந்தாத நிலையிலேயே உள்ளார்கள். எனவே நீங்கள் வருங்காலத்தில் அரசியல் தலைவராக வர நேர்ந்தால் திருத்திய வாழ்வை நாட்டுக்கும் உலகுக்கும் அளிக்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். எத்தகைய சூழலிலும் அரசியலில் இறங்கி விட்டவர் கல்விக்கூடத்தில் கால் வைக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டிய நிலைவரின் பெற். ருேர்’ என்ற நிலையில் உள் செல்லுங்கள். கல்விக் கூடங்களில் மாணவர், ஆசிரியர், பெற்ருேர் இவர்களைத் தவிர்த்து மற்ற வர்கள் என்று செல்ல அனுமதிக்கப் பெருது விலக்கப்பெறு கிருர்களோ-அல்லது விலகி நிற்கிருர்களோ-அன்றுதான் கல்விக் கூடங்கள் செம்மையாகும்; கல்வியின் தரம் உயரும்: மாணவரிடையேயும் அமைதி நிலவும். நாளை இந்த நல்ல பணி யைச் செய்ய நாடு உங்களை அழைக்கின்றது என்று கூறி மேலே செல்கிறேன். நாட்டிலும் உலகிலும் எத்தனையோ புதுப்புது நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. விண்ணை முட்டும் பணிகள்-ஆய் வுகள் வெற்றி பெறக் காண்கின்ருேம். நேற்றைய நிலையில்