பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£78 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமைஎனில் வெளிநாட்டோர் அதைவணக்கம் செய்தல் வேண்டும் என்பது பாரதியின் வாக்கு. இது தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமன்றி உலகமொழிகளுக்கும் அவற்றின்வழி உருவாகும் இலக்கியங்கள் அனைத்துக்கும் பொருந்துவதாகும். எனவே தமிழ் மாணவர்களாக உள்ள உங்கள் பணிவழியேதான் எதிர் காலத்தில் தமிழ் இலக்கியம் சிறக்கவழி உண்டு என் பதை உணர்த்தி மேலே செல்கின்றேன். l கலை, கல்வி, இவற்ருெரு பண்பாடு, நாகரிகம் என்ற சொற்களும் அடிக்கடி நாட்டில் பழக்கத்தில் உள்ளதைக் காண்கின்ருேம். இந்தச் சொற்களுக்கு நேற்றுத் தமிழில் வழங்கிய பொருளைக் காணின் இன்று நாம் எவ்வளவு தூரம் அவற்றை விட்டு அப்பாலே சென்று விட்டோம் என்ற உண்மை புலகுைம். புறக்கோலத்தையும் புற ஒழுக்கத்தை யுமே நாம் நாகரிகம் என நம்புகிருேம். சென்னை, கல்கத்தா முதலிய நகரங்களில் நாம் அப்புற நிலைகளையே பெரிதாகப் போற்றுகிருேம். ஆயினும் எண்ணிப் பார்க்கின்றபோது தமிழர்தம் பண்பாடும் நாகரிகமும் எந்த அளவில் இவற் றினும் மாறுபட்டுள்ளன என்பது புலகுைம். தமிழர் இப் புறக்கோலத்தை என்றும் வெறுக்கவில்லை. சங்ககாலப் பாடல்களைக் காணும்போது அவர்தம் உடையும் உணவும் பிற உயிர்நிலை பற்றிய வாழ்க்கை வசதிகளும் இன்று இருக்கும் நிலையினும் உயர்ந்தே இருந்தமையை அறிய முடிகின்றது. ஆனல் நாம் இன்று நினைப்பது போன்று அவர்கள் அவற் றையே நாகரிகம் என அறுதியிடவில்லை. அவையும் நாகரிக