பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வெள்ளிவிழாத் சொற்பொழிவுகள் சிறக்கும் நெறியை மிகுதிப்படுத்தலையே காட்டுவர் தொல் காப்பியர். பார்ப்பனப்பக்கம், அரசர்பக்கம், அறிவன்தேயம், தாபதர்பக்கம் என்று வாழ்வார் முறையும் வகையும் 'காட்டி அவ்வத்துறையில் அவரவர் சிறக்கும் நிலையினை விளக்கி மிகுதிப்படுத்தலே வாகை என்பர். இந்தச் சிறந்த வாழ்வியல் நிலையைப் பின் வந்தோர் எப்படியோ மாற்றி அமைத்துவிட்டார். உண்மையில் தொல்காப்பியர் ஒர் அமைதி உலகைச் சமைக்கின்ருரேயன்றிப் போராட்ட உல கைக் காண விரும்பக்கூட வில்லை. இறுதியாகக் காஞ்சியைப் பற்றிய தொல்காப்பியனர் கருத்தும் எண்ணத்தக்கது. எதிருன்றல் காஞ்சி என்று பிற் காலத்தார் போரில் எதிருன்றி நிற்றலை விளக்குவர். ஆளுல் தொல்காப்பியரோ காஞ்சி என்ருல் நிலையாமை என்ற பொருள் காட்டி, அந்நில்லா உலகில் நிலைக்கும் வகையில் அறமாற்றி நலம் துய்த்துச் சிறக்க வேண்டிய வகையையும் விளக்குகிருர். தொல்காப்பியர் காட்டிய புறத்தின் அமைதிப் படி நாம் வாழின் இன்பமன்றி வேறு எதைக் காணமுடியும்? பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றனும் கில்லா உலகம் புல்லிய நெறித்தே' (புறத். 23) என்பர் அவர். எனவே நில்லா உலகில் நிலைபெற்று இன்பம் துய்த்து வாழ வேண்டுமாயின் மாறுபாடு நீங்கி, ஒன்றிய உணர்விலே சிறக்க வேண்டும்; வாழ்வாங்கு வாழ வேண்டும்; வளம் கொழிக்க வழிகாண வேண்டும் என்பது தொல்காப் பியர் புறம் வழிக் காட்டும் வாழ்வியலாகும். இனித் தொல்காப்பியர் மரபியலில் உயிர்கள் வாழ் வினையும் அவற்றைப் பகுக்கும் முறையினையும் அவற்ருல் அமையும் பிற சிறப்பியல்புகளையும் காணலாம். தொல்காப் பியர் காலத்தில் தெய்வம் இல்லை என்பர் சிலர்; பாவம், அவர்கள் அறியாதவர்கள். தெய்வம் எதற்காக என்பதையும் அதன் நிலைபற்றியும் தொல்காப்பியர் காட்டுவர். தெவுக்