பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகன் மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப (மரபு. 2) பெண்பால் குறிக்க வருவன: பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தஞ் சான்ற பிடியோடு பெண்ணே (மரபு. 3) இவற்றுள் இன்னின்ன பறவை விலங்கு பிற உயிர்களுக்கு. உரியன என்றும் மரபியல் நன்கு விளக்குகின்றது. ஓரறிவுயிரா கிய புல் மர வகைக்கு உரிய இளமைப் பெயர்களை, பிள்ளை குழவி கன்றே போத்தே கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே (மரபு. 24). என வரையறுக்கின்ருர்.எனினும் இவற்ருல் நெல்லும் புல்லும் அழைக்கப்படா என அடுத்த சூத்திரத்தால் விளக்குகிரு.ர். இனி அறிவுடை உயிர்கள் படிப்படியாக வளரும் வகை யினை, ஒன்ற றிவதுவே உற்றறிவதுவே இரண்ட றிவதுவே அதைெடு நாவே மூன்ற றிவதுவே அவற்ருெடு மூக்கே நான்க றிவதுவே அவற்ருெடு கண்ணே ஐந்த றிவதுவே அவற்ருெடு செவியே ஆற றிவதுவே அவற்ருெடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபு. 27) என்று விளக்கிக் காட்டுகிருர். இவை ஒவ்வொன்றற்கும் உரிய உயிர்களையும் காட்டுகின்ருர்.