பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 49 காணத் தோன்றத் தேவையில்லை. தோன்றினும் காண்பர் அவள் ஒருவனுக்கு உரியவள், எனவே நமக்குத் தாய்’ என, நினைக்கும் வண்ணம் அமைய வேண்டும். இதை எண்ணிய வள்ளுவர், முதலில் அவள் முகத்துக்குச் சந்திரனே உவமை கூறிய வள்ளுவர், அவ்வுவமை சந்திரன் பலர் காணத்தோன்ரு வழியேதான் சிறக்கும் என உணர்ந்து, மலரன்ன கண்ணுள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி (குறள், 1119) எனக் கூறுகின்ருர். ஆம்! தலைவனுக்கு இத்தகைய தலைவி தனக்கே உரியவளாகிவிட்டாள் என்றபெருமிதம்-மகிழ்ச்சிஇன்பம் எல்லாம். இதே நிலையில் வாய்திறந்து பேசமுடியாத தலைவனைப் போல் தன் காதலைப் புறத்தே காட்டமுடியாத காதலியும் தன் செயலாலும் குறிப்பாலும் தன் காதல் இன்பத்தைப் புகழ்ந்தும் எண்ணியும் மகிழ்கின்ருள். கணவன் அவள் உள்ளத்து இடம் பெற்றுவிட்டான். கண்ணுள்ளும் கருத் துள்ளும் நிறைந்த கணவனை எண்ணியெண்ணிப் பார்க்கிருள். கணவன் கண்ணுள் இருப்பதால் கண்மூடி மைதீட்ட விரும்ப வில்லை. ஏன்? அதுவரை அவனை மறைத்து வைக்கவேண்டுமே என்ற எண்ணம். வெய்தாக உண்ண் விரும்பவில்லை, ஏன்? உள்ளத்திருக்கும் அவரைச் சுடுமே என்ற உணர்விலே. இவை யெல்லாம் அதன் செவ்வி தலைப்படுவார்க்கே தெரியும் நுண்ணிய பொருள்கள். கண்ணுளார் காத லரவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து (குறள், 127) என்பதும், நெஞ்சத்தார் காத லரவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து (குறள், 1128)