பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 61 மேற்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிருன். ஊரும் நாடும் நிலமும் பிறவும் செழிக்க இருப்பினும் சிறக்க ஓங்கினும் அவற்ருல் எல்லாம் பயன் விளையாது என்பதையும் அவற்றின் இடையில் அவற்றை வளர்த்து, காத்து, துய்க்கும் மனிதனே செம்மனத்துடன் தண்ணளியாளய்ை வாழ்தல் வேண்டும் என்பதையும், அவ்வாறு வாழாவிடில் எல்லா வளனும் வற் றியதாகிவிடும் என்பதையும், அவன் அறவாழ்வு வாழ்வா ஞயின் காடும் நாடாகும் என்பதையும் அறம் உரைத்த ஒளவையார் நன்கு விளக்குகின்ருர், ஒளவையார் என்றவுடன் தமிழ் நாட்டுப் பிள்ளைகளுக்கு அறஞ் செய விரும்பு’ என்ற தொடர் உள்ளத்தே தோன்றும் என்பது உறுதி. இன்றைய கல்வித் திட்டத்தில் இந்தத் தொடருக்கு முதல் இடம் இல்லையாயினும் தமிழ் நாட்டுக் கல்வி முறை அறஞ் செய விரும்பு’ எனவே ஆரம்பிக்க வேண்டும் என்ற கொள்கை இன்னும் மறைந்துவிடவில்லை. ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நல்வழியே மாணவர்களுக்கு நல்வழி காட்டும் முதல் நூல்கள். அவற்றை இன்றைய பள்ளிப் பிள்ளைகள் முதலில் கற்கும் பேறு பெறவில்லை. காரணம் இதோ நாம் காண இருக்கின்ற பாட்டே காட்டும். நானும் இங்கே பிற அறிஞர்கள் காட்டும் அறங்களைத் தொடுமுன் அனைவருக்கும் அறிமுகமான ஒளவைப் பாடலையே காட்ட விரும்புகிறேன். 'ஒளவை தமிழகத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர் வாழ்ந் துள்ளனர். பிற்காலத்து வாழ்ந்த ஒளவை யாரே நாம் மேலே கண்ட அறநூல்களை இயற்றியவர். எனினும் சங்க காலத்து ஒளவையும்-சான்ருண்மை குன்ரு அச்செல்வியும் . அறங் கூறுவதில் சளைத்தவர் இல்லை என்பது நாம் காண இருக்கும் ஒரு சில பாடல்களாலேயே நன்கு விளங்கும். நாடா கொன்ரு காடா கொன்ரு, அவலா கொன்ரு, மிசையா கொன்ரு. எவ்வழி கல்லவர் ஆடவர் அவ்வழி கல்லே வாழிய கிலனே (புறம். 187)