பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•68 வெள்ளிவிழாச் சொற்ப்ொழிவுகள் வாழச் செய்த கல்வின்ை யல்லது - ஆகுங் காலைப் பிறிதொன் றில்லை (புறம். 367) என்பது அவர் வாக்கு. இதில் அவர் மக்கள் எவ்வாறு இல்லறத்தில் சிறப்போடு பொருந்தி வாழவேண்டும் எனக் காட்டுகின்ருர். அதைப் பிறகு காண்போம், இங்கு அற மாற்றும் வகைபற்றி வேறு சில புலவர்கள் பாடும் வகை கண்டு மேலே செல்லலாம், - 'இருப்பது பொய் போவது மெய் என்ற தொடர் வாழ் வில் பொய்ப்பதில்லை. எனவே வாழும் நாட்களில் நாம் நல்லது செய்தால் அதுவே நம்மொடு கூடிவரும் என ஒளவை யாரும் பிற புலவர்களும் கூறியுள்ளமை கண்டோம். எனவே நல்லது செய்தல் இம்மையில் எல்லோரும் உவப்பது; மறுமை வாழ்வை மரைவைப்பது. மனிதப் பிறவியின் பயனே அது தான்-அறமும் அதுவே. ஆயினும் அந்த நலமாற்ரு நிலை ஒரு வேளை பல்வேறு சூழல்களுக்கிடையில் அமையுமாயின் என்ன செய்வது?’ என்ற எண்ணம் தோன்றின் அதற்கும் நரிவெரூஉத் தலையார் என்ற புலவர் பதில் தருகின்ருர். நல்லது செய்ய முடியா விட்டாலும் அல்லதையாவது செய்யாதிருங்கள் என்பதே அவர் வேண்டுகோள். அவ்வாறு செய்யாதார் 'இயமன் வருங்காலை என்செய்வர்?' என இரக்கப் படுகிருர் -sg|QIT. நல்லது செய்தல் ஆற்றிரா யினும் அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் கல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே (புறம். 195) என்ற அவர் வேண்டுகோளை உங்கள் முன் வைத்து மேலே செல்கின்றேன். புறம் பாடிய புலவர்கள் சில தனிப்பட்ட அறங்களைத் திட்டவட்டமாக வற்புறுத்துவதையும் காணல் ஏற்புடைத்