பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:புறம் காட்டும் அறம் 71 ருக்கு ஒல்லுவதல்லவா? இதை அவன் வாய் உலகுக்கு -உணர்த்துகின்றது. இதுதான் அவன் பாடல். செய்குவங் கொல்லோ கல்வினை' எனவே ஐயம் அரு.அர் கசடீண்டு காட்சி நீங்கா கெஞ்சத்துத் துணிவுஇல் லோரை யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதல்ை உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி ைேர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டுஎனின் தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் தொய்யா உலகத்து நுகர்ச்சி இன்றெனின் மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம்இசை கட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே (புறம். 214) என்ற இப்பாடல் தனித்த விளக்கம் பெற வேண்டுவது. காலம் க்ருதி மேலே செல்லலாம். கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக் கண்டும் என்றும் திறமாய் இருப்போம் என்று எண்ணித் தருக்கி வாழ்வோர்தான் நாட்டில் மிகப் பலர். இடுகாடு நமக்கு எண்ணற்ற நீதிகளை உணர்த்துகின்றது. அந்த நீதிகளை உணர்ந்து நலமாற்றத் தடுமாறுகின்றது மனித உள்ளம். அத்தகைய மனித சமுதாயத்து, பிறர் வேவதைக் கண்டு, நமக்கும் அதுவழியே என உணர்ந்து நல்லறமாற்றும் வல்லவ ரைக் காண முடியவில்லையே என்று தடுமாறுகின்றது தாயங் கண்ணஞரது பேருள்ளம். அவர் வாய் பாடுகிறது. நமக்குப் பேரறம் கிடைக்கின்றது. - எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து மன்பதைக்கு எல்லாம் தானுய்த் - தன்புறம் காண்போர்க் காண்பறி யாதே (புறம். 356)