பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 73 வதும் அல்லது செய்தார் வீவதும் உலகியற்கை. சிலர் இந்த அடிப்படைச் சட்டத்தை இல்லை என மதியாது மனம் போன போக்கெல்லாம் போய்க் கெடுகிருர்கள். அவர்தம் உறவே வேண்டாம் என்கிருர் புலவர். ஆம், கூடுபவர் தன்மையி லேயே மக்கள் வாழ்வு அமைகின்றமையின் அக்கூட்டம் எப்படி இருக்கவேண்டும் என எண்ணுவது இயல்புதானே? அந்த எண்ணத்தில் அப்புலவர், நல்லதன் கலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனனு கிலியர் (புறம். 29) எனப் பாடுகின்ருர், உலக மக்கள் இந்நெறி செல்லின் பல கொடுமைகள் அகலுமே, செல்லுமா? இனி இவ்வுலகில் புகழுடம்பு பெற்றவரே மறுமையிலும் பேரின்ப நெறி எய்துவார் என்பதே அறம் வகுத்த மேல் வரிச் சட்டம். ஆயினும் பிறந்த அத்துணையோரும் அந்தப் புகழுக்கு உரியவராதல் இல்லை. ஆகவே உயர்ந்தோர் சில ராக அல்லார் பலராக அமைகின்றனர். இதையே அதே முது கண்ணன் சாத்தனர், * உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரை இலை போல மாய்ந்திசினேர் பலரே (புறம். 27) என உவமை நயம் தோன்றக் கூறுகின்ருர், மோசிகீரனரோ, முரசுகட்டிலில் உறங்கிய அளவில் தம்மை வாள் கொண்டு ஒறுக்காது, கையில் கவரிகொண்டு வீசிய பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாராட்டு முகத்தான், இவனிசை யுடையோர்க் கல்லது அவனது உயர்கிலே யுலகத் துறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வளம்படு குரிசில்ரீ ஈங்கிது செயலே (புறம். 5.0) வெ-5