பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘76 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் “இன்றே போல்க நும்புணர்ச்சி என்று வாழ்த்தி அப் புணர்ச்சி இடையருது இருந்து சிறக்க வேண்டுமானல் அவர்கள், காதல் கெஞ்சின் நும் இடைபுகற்கு அலமரும் ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறம் 58) என்கின்ருர். இப்படியே மற்ருெரு புலவர் சாத்தனர் தேற் ருய் பெரும பொய்யே (புறம், 59) என்று மன்னன் பொய் கடிய வேண்டிய திறனைச் சுட்டிக் காட்டுகின்ருர். முரஞ்சியூர் முடிநாகராயர் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர். அவர்சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் பாராட்டியவர். அவன் பாரதப் போரில் சோறளித்தவன் எனப் பேசப்பெறுகிருன். எனவே அப்பழங்காலத்தில் வாழ்ந்த இப்பெரும் புலவர் அவனிடம் நேருக்கு நேராக நின்று நிலைகெடாத நடுக்கற்ற உள்ளத் தைப்பெற வேண்டிய நற்றிறனை வலியுறுத்துகின்ருர். எது வரினும் வருக, அல்லது எது போயினும் போக'ள்ன அஞ் சாது, உளந்தடுமாறி நடுக்காது எந்த இடர்ப்பாட்டினும் அஞ்சாதிருப்பதே ஆண்மை. இந்த உண்மையை ஆண்ட வனைப் பாட வந்த அப்பரடிகள், மண்பா தலம்புக்கு மாகடல்மூடி மற்றே ழுலகும் விண்பால் திசைகெட்டு இருசுடர் விழினும் அஞ்சல் நெஞ்சே எனக் காட்டுவர். இதையே முரஞ்சியூர் முடிநாகராயர், அம்மன்னர் இல்லறத்தில், இனிதிருந்து கடமை மறவாது வாழ வேண்டும் என்ற அடிப்படையில், பாஅல்புளிப்பினும் பகல் இருளினும் நால்வேத நெறிதிரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி கிலியரோ (புறம். 2)