பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 91 பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்பர் வள்ளுவர். எனவே தம்மை மறந்தவர் மெய்யடியாராகின்ருர். இதையே அப்பர் பெருமாளுர், இறையடி அடைந்த உயிர்த் தன்மையைக் காட்டவந்தபோது, தன்னை மறந்தாள் தன்காமம் கெட்டாள் தலைப்பட்டாள் கங்கை தலைவன் தாளே எனக் கூறினர். இத்தகைய தம்மை மறக்கும் பண்பு அனைவர்க்கும் எளி தில்வருவதன்று. வேதாந்த நெறி கூறவந்த வித்தகரும்‘உன்னை நீ அறிந்தாயாகில் உனக்கொரு கேடுமில்லை என்பர். மறத் தலும் அறிதலும் இரண்டும் ஒன்றிலே ஒன்று சென்று முடி வனவே. நமக்கு மேலுள்ள இறைவனே நம்மை இயக்குபவன். நாம் அவன் உடைமை;நாம் அவன் கைப்பொருள்; அவன் ஆட்ட நாம் ஆடுகின்ருேம்; நன்மை தீமையும்அவன்வழி வரு வன; நமக்கென்? என்ற உணர்வே தம்மை மறக்க வைக்கும். அம்மறந்தநிலையிலேயே பெருந்தொண்டு முகிழ்க்கும். அதுவே உலகத்துக்கு ஒளியாகி வழிகாட்டும். அவ்வாறு வழிகாட்டிய நல்லவர்கள் நாட்டில் எப்போதோ ஒருமுறை தோன்று வார்கள். அப்பெரியாருள் பெரியாராக விளங்கியவர் மாணிக்கவர்சகர். தம் சமயமாகிய கிறித்தவ சமயத்தைப் .பரப்ப வந்த போப் பாதிரியாரைத் தம் பக்கல் ஈர்த்து அவரை மறக்கச் செய்த இவர் பாடல்களே இவர் பெரு நிலைக்கு ஒரு சான்ருகும். மாணிக்கவாசகர் பாண்டியனுக்கு அமைச்சராக இருந் தவர். எனவே இன்றைய தலைப்பை இட்டுள்ளேன். அமைச் சுத் தொழிலில் வல்ல மணிவாசகர் எப்படித் தம்மை மறந் தார்? ஏன் மறந்தார்? பயன் என்ன? என்ற வினுக்களுக்கு விடை காணின் முடிவு தெளிவுறும். மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தவர். அவர் முன்னேர் அமைச்சராக இருந்துள்ளனர். எனவே பாண்டி .யன் அரிமருத்தனன் இவரை அமைச்சராக ஏற்றுக் கொண்