பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 93 நடைபெற்றன என்பது தெளிவு. (இதுபற்றி விளக்கமாக நான் வேறு நூலில் காட்டியுள்ளேன்.) அவர் பாண்டியன் பொருளைக் கொண்டு நெறியல்லா நெறிநின்று கடமை மறந்து அக்கோயிலைக் கட்டியிருப்பாராயின் அக்கோயில் என்ருே அழிந்திருக்கும்; அவர் பாடல்கள் என்ருே மறைந் திருக்கும்; அவரும் உலகில் இத்துணைநாள் வாழ்ந்திருக்க மாட்டார். எனவே அவர் புகழ் வாழக் காரணமான கோயில் வழியே பிற வரலாறுகள் அமைகின்றன எனக் கூறி மேலே செல்லலாம். மாணிக்கவாசகர் பெருந்துறைக்குச் சென்றபோது, இறைவன் வலிய வந்து ஆட்கொண்டான். திருவாசகம் முழுதும் பெரும்பாலும் அவரது வரலாற்றைக் கூறும் சுய சரிதம் என்னுமாறு அமைந்துள்ளது. அவர் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளையும் இறைவன் தம்மை ஆட் கொண்ட அருட்டிறத்தையும் தம் பாடல்களுள் பலவிடங் களில் விளக்கியுள்ளார். இறைவன் இவர் பொருட்டாகத் தாமே வலிய வந்து குருந்த மரத்தின் கீழே காட்சி தந்ததும், இவருக்காகக் குதிரைச் சேவகனக வந்ததும் பிரம்படி பட்டதும் பிற வரலாறுகளும் நாடறிந்தனவே. அவற்றை நேரிலே கண்டு தம்மை மறந்த மாணிக்கவாசகர் தம் வாயாலே பாடுகின்ருர், அவர் வாக்கிலேயே காணலாம். தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய் (7-8) என இறைவன் தானே வலிய ஆட்கொண்ட வள்ளலான தன்மையை விளக்குகிருர். தாம் அவனைக் காணும் அறிவும் அருளும் பெற்றிராத நிலையிலும் வந்து அருளிய பெருமையை வியந்த அடிகளார், கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகே னுயிடினும் மற்றறியேன் பிறர் தெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்து