பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 97 ఛ్ அவ்வாறு விடாது காக்க வேண்டிய கடன் இறைவனுடையது என்றும், காக்கக் கூவிய அவன் காவா விட்டால் அவனுக்கே பழிசார நிலை நிற்கும் என்றும் கூறுவர். மேலும் அவன் காவா விட்டால் உலகத்தார் முன் அவனத் தாம் பழிக்கப் போவதா கவும் கூறுகின்ருர். அவ்வடிகளில் அடிகள்ாரது சொல்லழகும் பொருளழகும் நன்கு புலப்படும். இறைவன் தம்மைக் கைவிடுவாயிைன், அவனைக் கண்டனென்றும், குணமிலி யென்றும், தேய்ந்த மதியுடையவன் மானிடன் என்றும், மாபரனென்றும் பழிப்பதாகக் கூறுகின்ருர். விடின் வேலைகஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபரன் என்றென் றறைவன் பழிப்பினையே (6-46). என்ற சொற்களில் இருபொருள் தொக்கி நிற்பதைக் காணல் இலக்கிய நயம் பயப்பதாகும். மேலும் வலிய வந்து காத்த இறைவன் கைவிடுவாயிைன் அவனைத் தாம் எவ்வாறு பழிப் பிப்பார் என்பதை, - ஆரடி யானென்னின் உத்தர கோசமங் கைக்கரசின் சீரடி யாரடி யானென்று கின்னைச் சிரிப்பிப்பனே (6-48) என்றும், விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்கஞ் சூண்பிச்சன் ஊர்ச் சுடுகாட் டெரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சன்என் றேசுவனே (6-49) என்றும் பல்வேறு வகையில் பாடுகின்ருர். இவற்ருல் நாம் இவருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பினையும் அருட் பிணைப்பினையும் எண்ணி எண்ணி மகிழ்ந்து இவரது தம்மை மறந்த நிலை'யினையே போற்ற வேண்டியுள்ளது. இறைவன் தம்மை எவ்வாறு எப்போது வந்து எவ்வகை யில் ஆட்கொண்டான் என்ற உண்மையை,