பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

21



“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்று மாணிக்கவாசகர் அன்றே பாடியுள்ளார். பேராசிரியர் அ.மு.ப. அவர்கள் அன்னைக்குச் செய்த பெருமை அன்னையர் குலத்திற்கே செய்த பெருமையாகும். தன்னுடைய தாயின் பெயரால் தொடங்கி வள்ளியம்மாள் அறக்கட்டளையை நிறுவியது சாலச் சிறந்தது என்பதைக் கூற விரும்புகிறேன்.

எந்த நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடையவில்லையோ அந்த நாடு முன்னேற்றம் அடையாது என்று காந்திஜி கூறுகிறார்.

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். புரட்சித் தலைவர் பதவியில் இருக்கும்போது கூட பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்தார். பெண் இனத்திற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்துள்ளார். புரட்சித் தலைவியை அடையாளம் காட்டியவரே புரட்சித் தலைவர் தான். அந்த அளவிற்குப் பெண் இனத்தின் மேல் நம்பிக்கைக் கொண்டவர் புரட்சித் தலைவர்.

ஆண், பெண் இருவருமே இச்சமுதாயத்தின் இரு கண்களாவர். அதில் ஒன்று பழுதுபட்டால் கூட நாடு முன்னேற்றம் அடைய முடியாது. ஆகையால் இருசாராரும் ஒத்துழைக்கவேண்டும். ஒரு நாடு கல்வி வளர்ச்சியை அடைந்தால் தான் அந்நாடு நல்ல முன்னேற்றத்தினை அடைய முடியும். ஒருநாட்டின் நிலையான செல்வம் அந் நாட்டில் ஓங்கி உயர்ந்துள்ள கட்டடங்கள் அல்ல. அவை இடிந்து விடும், இயற்கை அழகுச் செல்வங்களும் அல்ல. அவை காலத்தால் அழிந்து விடும். எங்களைப் போன்ற