பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயர் திரு. வெ நல்லதம்பி அவர்கள் (உதவி இயக்குநர், சென்னைத் தொலைக்காட்சி) முதற் படியினைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய உரை. (12-3-93)



மாண்புமிகு அமைச்சர் அவர்களே! உயர் திரு. கோ. செல்வம் அவர்களே! துணைவேந்தர் அவர்களே! மதிப்பிற்குரிய ஐயா நிறுவனர் அவர்களே! பெரியோர்களே! மாணவச் செல்வங்களே! வணக்கம்.

இன்று என் வாழ்க்கையின் ஒரு பொன்னாள் என்று கருதுகிறேன். வெள்ளி விழா காணும் இக்கல்வி அறத்தின் நிறுவனர், என் பேராசிரியர் எழுதிய 'சான்றோர் வாக்கு' என்ற நூலின் முதல் பிரதியைப் பெறுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 1970களில் மூன்று ஆண்டுகள் ஐயா அவர்களின் விரிவுரைகளைக் கேட்டவன் நான். இவருடைய அரும்பெரும் உரைகளை வானொலியில் ஒலிபரப்பி, இப்பொழுது அதனைத் தொகுத்து நூலாக அமைத்து அதன் முதல் பிரதியைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முன்பு பேசியவர் களெல்லாம் தங்களுக்கும், ஐயா அவர்களுக்கும் உள்ள உறவு முறை பற்றிப் பேசினர். நான் இருவகையில் உறவு முறை உடையவன். ஒன்று நான் ஐயா அவர்களின் மாணவன். இரண்டு அவருடைய மகன். என் வகுப்பறைத் தோழன். நாங்கள் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து ஐயா அவர்களின் உரையைக் கேட்கும் பேறு பெற்றவர்கள்.

இப்பொழுது நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் கூற விழைகிறேன். வானொலியும், தொலைக்காட்சியும் மொழியை முதலாக வைத்து நடத்தி வரும் நிறுவனங்களாகும். ஐயா அவர்களும் மொழியை முதலாக வைத்து இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றவர். ஐயா அவர்கள் என்னிடத்தில் ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மொழி வளமோ,