பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா நான்காம் நாள்
~ ஆசிரியர் நாள்- [13-3-93]


தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு செ. அரங்கநாயகம் அவர்கள் ஆசிரியர் நாளில் ஆற்றிய உரை (13-3-93)

வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் அ மு. பரமசிவானந்தம் அவர்களே, கல்வித்துறைச் செயலர் சங்கரசுப்பையன் அவர்களே, சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் டாக்டர் கோவிந்தராஜுலு அவர்களே, கல்லூரித் தலைவர் அவர்களே, தலைமை ஆசிரியர்களே, பேராசிரியரிகளே, ஆசிரியர்களே, பெற்றோர்களே அன்பு மாணவ நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கல்விப்பணி கடந்த 25 ஆண்டுக் காலமாக சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுகின்றது. இந்த அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றுவரும் கல்வி நிறுவன வெள்ளிவிழா நிகழ்ச்சியில் நான் அவரோடு வந்து கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். பேராசிரியர் அ. மு. ப. கல்வித் துறையில் அனுபவமும்; ஆர்வமும் கொண்டவர். அவரது தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வி நலனுக்காக நடைபெறுகின்றது. ஐயா அவர்களுக்கு இச்சமுதாயம் நன்றிக் கடன்பட்டுள்ளது. என்பதில் சந்தேகம் இல்லை, அவர்கள் நீண்டநாள் வாழ்ந்து இந்த அறக்கட்டளையின் கல்விப்பணி மேலும் சிறக்க, திட்டம் பல நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன். இப்போது கல்வி நிறுவனங்கள் தனியார் முறையில் இயங்கி வருகின்றன. அரசாங்கம் தான் கல்வியைத் தர வேண்டும் என்றாலும் இரண்டு காரணத்தால் அரசாங்கமானது முழுமையாக கல்வி தரும் பொறுப்பை ஏற்றுச் செயல் படுத்த முடிவதில்லை. மேலும் நிதி ஆதாரம் போதுமானதாக இல்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் முழுமையாக கல்வியைத் தரமுடியாத போது, தனிப்பட்டவர்களும்