பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

வள்ளியம்மாள் கல்வி அறம்


கருத்துக்கள் ஆகியவற்றைப் புத்தக வடிவிலே ஏற்படுத்தி நமக்கு விருந்தாகப் படைத்திருக்கிறார். அத்தகையதொரு விருந்தினை இந்த ஆசிரியத் திருநாளில் நல்லவை ஆற்றுமின் என்ற நூலை வெளியிட்டு, அதன் முதல் பிரதியை எனக்குக் கொடுத்துள்ளமையை எண்ணும்போது நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்நூலிலே, ஆசிரியர்களை மாணவர்கள் ஓர் எடுத்துக் காட்டாகப் பார்க்கின்றனர். மாதா, பிதா, குரு தெய்வம் என்கிறார்களே அதாவது கடவுளுக்கும், தாய் தந்தைக்கும் அடுத்தபடியாக ஒரு உன்னத ஸ்தானத்திலே ஆசிரியர்களை வைத்து விளக்குகின்றார். ஆசிரியர்கள் நற்பண்புகளோடு விளங்க வேண்டும், சிறந்த கல்வி அறிஞர்களாக வரவேண்டும் என்றும் ஒழுக்க நெறிமுறைகளை உடையவர்களாகத் திகழ வேண்டும் என எடுத்துரைக்கின்றார்.

பள்ளி அல்லது கல்லூரியில் எந்தப் பாடத்தினை நடத்துகிறார்களோ, அதில் மிகவும் புலமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது மாணவர்கள் தங்களை மறந்து ஆசிரியர் முகத்தைப் பார்த்துக் கொண்டு செவிகளால் இன்பத்தைப் பருகுகின்றார்கள். அத்தகைய ஆசிரியர்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது என்ற காரணத்தினால் இவரது “நல்லவை ஆற்றுமின்” என்ற நூலை வெளியிட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது. நல்ல செயல்களைச் செய்யாவிடினும், இய செயல்களைச் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஆசிரியர்கள் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய கருத்துக்களை எடுத்துச் சொல்லி மாணவர்கள் தங்களைப் பின்பற்றி நடக்குமாறு செய்தால் அவர்களும்