பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா ஆறாவது நாள் 15-3-93 (திங்கள்) வாழ்த்தியல் விழா (பரிசளிப்பு விழா)

அன்னை வள்ளியம்மாள் சிலை திறப்பு நாளன்று குஜராத் மாநில உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நடுவர் தலைவர். உயர்திரு. பு. ரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரை.



வள்ளியம்மாள் கல்வி அறத்தின் நிறுவனர் அ. மு.ப அவர்களே! திருமதி. கோ. வசந்திதேவி அவர்களே! கடல் மடையைத் திறந்தது போலச் சொற்பொழிவாற்றிய திருமதி கவிநிலவு தர்மராஜ் அவர்களே! திரு. பரமசிவம் அவர்களே! பள்ளி, கல்லூரி முதல்வர்களே! ஆசிரியப் பெருமக்களே! இங்கு அமர்ந்திருக்கின்ற பெற்றோர்களே! மாணவர்களே! மாணவிகளே!

பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராகப் பணிபுரிந்து, இந்த அருமையான கல்வி நிறுவனத்தை அண்ணாநகரிலே நிறுவி, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைக் காணுகின்ற போது நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

“ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று, பையலென்றபோதே பரிந்தெடுத்தாளே வள்ளியம்மை.” அந்த வள்ளியம்மை இந்த மைந்தனைத்தான் பெற்றெடுத் தார்கள் என்பதை நம்முடைய அ.மு.ப. அவர்கள் இன்றைக்கு நிரூபித்திருக்கின்றார்கள். தாய்மைக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” என்ற தத்துவத்திலே பிறந்த அவர்கள் பெண்களுடைய கல்வியிலே தன்னுடைய நாட்டத்தைச் செலுத்தி, அண்ணாநகரிலே அருமையான கல்லூரியை நடத்தி வருகின்றார்கள். ஆகவே பெண்களுக்கு உயர்வு அளிக்கவேண்டும் என்றாலும் பரமசிவானந்தம் போன்ற ஆண்தான் தேவைப்படுகின்றார்கள். ஆகவே பரமசிவானந்தம் அவர்களை ஆண்களும், பெண்களும் சேர்ந்து வாழ்த்துகின்றோம்,

இங்கு உரையாற்றிய திருமதி. கவிநிலவு தர்மராஜ் அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஆணித்தரமானவ—6