பக்கம்:வெள்ளை யானை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37 வெள்ளை யானை

கடல் வயிற்றிலிருந்து
புறப்பட்ட அலை
நுரைத்துப் பொங்கிக் கிளம்பி
மலையாக உருண்டு,
கரையில் மோதிமோதி
உடைவதைப் போல்,
அவளுக்குள்ளும்
அடுக்கடுக்காய் ஆனந்த அலைகள்!

மழை ஓய்ந்து
சிறு தூறலாக,
பர்ண சாலைக்கு வெளியே
பாத குறட்டுச் சத்தம்.

நெருப்புச் சூடு
பட்டது போல்
நிலைக்குத் திரும்பினர்
இருவரும்!

‘வானவர் தலைவா!
வந்து விட்டார் கெளதமர்!
தப்பிப் பிழைத்துக் கொள்' - என்று
தவித்தாள் அகலிகை.

யானையாக வந்தவன்
பூனையாகிப் புறப்பட்டான். மலையுச்சியிலிருந்து
வேகமாகப் புரண்டுவரும்
பாறாங் கல்லாக,
இறங்கி யோடிவரும்
எரிமலைக் குழம்பாக
எதிரில் வந்தான் கெளதமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/27&oldid=1313238" இலிருந்து மீள்விக்கப்பட்டது