பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5 நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும், அனுபவித்து அறிந்தவைபற்றி வாசகர்களாகிய உங்களுக்குச் சொல்லவே இந்த வேங்கடத்துக்கு அப்பால், என்ற கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறேன். ஒருசில அன்பர்கள் இக்கட்டுரைத் .தொடர் பிரயாணக் கட்டுரையாகவே அமையலாம். தங்கள் பிரயாண அனுபவங்கள் பலருக்கும் பயன்படுவதாக இருக்குமே என்று எழுதுகின்றனர். ஆனால் இவைகளைப் பிரயாணக் கட்டுரைகளாக எழுதும் நோக்கம் எனக்கில்லை. வழக்கம்போல் தலம் தலமாகச் சென்று நின்று, நிலைத்து விளங்குவதாகவே கட்டுரைகள் இருக்கும். என் பிரயாண அனுபவங்களை 'எண்பது நாட்களில் இந்தியாவைச் சுற்றி'என்ற தலைப்போடு ஒரு தனிப்புத்தகமாகவே எழுதத் திட்டம். * வேங்கடத்துக்கு அப்பால்’ என்று கட்டுரைத் தொடரின் தலைப்பு அமைந்தாலும், நமது தல யாத்திரை மைசூரில் உள்ள நஞ்சன் கோட்டிலே துவங்குகிறது. காரணம் எனது தலயாத்திரை கோவையிலிருந்து தானே துவங்கியது. சரி, வாசகர்களாகிய நீங்களும் இனி என்னுடன் சேர்ந்து யாத்திரையைத் துவங்கலாம் அல்லவா? என்ன வருகிறீர்களா?