பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அவனை வென்று பூமாதேவியை மீட்டு வந்திருக்கிறார். வராக அவதாரம் எடுத்தபோது இடது கொம்பால் குத்தி வலது கொம்பால் பூமாதேவியை வெளிக்கொணர்ந்திருக் கிறார். அப்படி பூமாதேவியை கொண்டுவந்த இடது. கொம்பே துங்கையாகவும், வலது கொம்பே பத்ரையாகவும் மாறிப் பெருக்கெடுத்தது என்பது கதை. உண்மைதானே வராக அவதாரத்தின் மூலம்தானே நிலம் உழும் முறை வழக்கத்திற்கு வந்திருக்கிறது. நிலம் உழ அதன் வளம் பெருக நீரும் ஆறாகப் பெருக வேண்டியதுதானே. அதனால்தானோ, வராக வடிவில் காத்தக் கடவுள் தன் இரு கொம்புகளால் பூமியைக் குத்திக் குடைந்து உள்ளே உள்ள தண்ணிரை வெளியே கொணர்ந்திருக்கிறார். இப்படி ஆற்றுப் பெருக்கு ஏற்படுத்தியதையே, ஒரு கதை யாக நமக்கு தந்திருக்கிறார்கள், நமது முன்னோர்கள், இப்படி உருவான துங்கையின் கரையிலே உள்ள சிறிய ஊர்தான் சிருங்கேரி, சிருங்கேரி என்ற உடனே ந்மக்கு ஞாபகம் வருவது ரிஷ்யகிருங்கர் கதை அல்ல. சிருங்கேரி என்றதும் சிருங் கேரியில் உள்ள சங்கராச்சார்ய சுவாமிகளும், ஆதிசங்சர பகவத்பாதாள் நிறுவிய சாரதா பீடமும்தான். காலடியில் பிறந்து, சிறந்த அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பிய ஆதி சங்கரர் நிறுவிய மடங்கள் நான்கு. மைசூர் ராஜ்ஜியத்தில் உள்ள சிருங்கோரி, ஒரிஸ்ஸா ராஜ்யத்தில் உள்ள பூரி, கத்யவாரில் உள்ள துவாரகை, இமயத்தில் உள்ள பத்ரி என்ற நான்கு இடங்களிலும் மடங்கள் நிர்மானிக்கப் பட்டிருக்கின்றன. அதில் சிருங்கேரியில் மடம் ஸ்தாபிக்க நேர்ந்த சம்பவம் இதுதான். அவரது யாத்திரையில் இந்த தலத்திற்கு வந்ததும், இங்கு பிரசவ வேதனையில் இருந்த ஒரு தவளைக்கு, அதன் ஜன்ம விரோதியான பாம்பு ஒன்று படம் விரித்து நிழல் தந்து பாதுகாத்து நின்றதும் இதைக் கண்ட சங்கரர் இதுவே சாந்தி நிலவும் அற்புதமான இடம் என்று உணர்ந்து இங்கே மடம் நிறுவியிருக்கிறார். ஆம்