பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}{} சங்கரர் கோயிலுக்கு வடபுறம் ஜனார்த்தனனுக்கு ஒரு கோயில். அதற்கும் கொஞ்சம் வடக்கே சக்தி கணபதிக்கும் வாகீஸ்வரிக்கும் தனித்தனியே கோயில்கள். ச. க் தி கணபதியையும், வாகீஸ்வரியையும் வி த் ய | ர ண் ய ர் உபாசனை (பண்ணி வந்திருக்கிறார். மைசூரை ஆண்ட திப்புசுல்தானும் அவனது தந்தை ஹைதர் அலியும் அவர்களது காலத்திருந்த பீடாதிபதியை மிகவும் கெளர வித்து வந்திருக்கிறார்கள். தங்கள் பகைவர்களை வெல்ல, பீடாதிபதிகளைக் கொண்டு சத்கண்டிஹோமம் சஹஸ்ர சண்டி ஹேரமம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்னும் வித்யாரண்யரது வரலாற்றைக் கூறும் செப்புப்பட்டயங்கள் .பல இருக்கின்றன. வித்யாரண்யர் அதிசய சக்தி வாய்ந் தவராக இருந்திருக்கிறார். ஊமைகளைப் பேசச் செய்திருக் கின்றார் 1886-ல் சமாதியான இந்த வித்யாரண்யரை ஹம்பியில் விருபாக்சரது கோயிலுக்குப் பக்கமே அடக்கம் செய்து, கோயில் கட்டியிருக்கிறார். அந்தத் தலத்துக்குப் போகும் போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சிருங்கேரி போகும் சமயம் ஆச்சார்ய சுவாமிகள் அங்கிருந்தால், அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி ஆசிபெற்றுத் திரும்பலாம். இல்லாவிட்டால் வித்யாசங் கரை வணங்கிய திருப்தியோடு திரும்பலாம்.