பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. விஜயநகரத்து விட்டலர் விஜய நகரம் என்ற பெயரைக் கேட்ட உடனே கலை. உலகில் அதன் பிரசித்தி நமக்கு ஞாபகம் வரும். விஜயம்" என்ற உடனேயே அந்த நாயக்க மன்னர்கள் கண்ட வெற்றி யெல்லாம் நம் கண்முன் வரத்தானே செய்யும். இன்றைய தமிழ் நாட்டுக் கோயில்களில் எல்லாம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், கல்யாண மண்டபம் முதலிய மண்டபங்களை நிர்மாணித்தவர்கள் யார்? கோயில் வாயிலில் பெரிய பெரிய கோபுரங்களைக் கட்டியவர்கள் யார்? அற்புதம் அற்புதமான சிற்பவடிவங் களை அமைத்து அவைகளில் சிற்றுளியின் நயம் எல்லாம் தெரியும்படி நுணுக்க வேலைப்பாடுகள் செய்தவர்கள் யார்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டால் அதற்கெல்லாம். விஜய நகர மன்னர்களே என்ற ஒரே விடைதானே கிடைக்கும். இந்த விஜய நகர மன்னர்கள் என்பவர் யார், இவர்கள் அமைத்த சாம்ராஜ்யத்தின் சரிதம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முகமது கோரி டில்லி முதலான பகுதிகளைக் கைப்பற்றி முகம்மதியப் பேரரசை ஏற்படுத்தியிருக்கிறார். குத்புதீன் என்பவன் அந்த அரசை மிகவும் வலிமை உடையதாகச் செய்திருக்கிறான். வட இந்தியாவில் இப்படி நிலைத்த முகம்மதியரது ஆட்சி தெற்கு நோக்கிப் பரவ ஆரம்பித். திருக்கிறது. தகதிணத்தில் அப்படி ஏற்படுத்திய ஆட்சியே பாமினிராஜ்யம் எனப்படும். இந்த ராஜ்யம் தென்னிந்தி யாவில் பரவாமல் இருக்க தென்னாட்டு அரசர்கள் பலர் முயன்றிருக்கின்றனர். ஆனால் அலாவுதீன் கில் ஜியின் சேனைத்தலைவனான மாலிக்காபூரின் படைஎடுப்பால்