பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 தேவகிரியாதவர்களும் துவார சமுத்திரத்து ஹொய்சலர் களும் நலிவுற்றிருக்கின்றனர். 1838-ல் முகம்மது பின் துக்ளக் என்பவன் தென்னாட்டின் போரில் படையெடுத்து ஆனைக் குந்தியைக் கைப்பற்றி அங்குள்ள அரசகுலத்தினரை யெல்லாம் அழித் திருக்கிறார். அரசகுலத்தை நிர்மூலம் செய்த பின்னர் அங்கிருந்த மந்திரிகளில் ஒருவரான ஹக்கா என்பவரை அந்த ராஜ்யத்தின் அதிபதியாக்கியிருக்கிறார். அவர்தான் சரித்திரத்தில் முதலாவது ஹரிஹரிதேவராயர் எனப்படுபவர். அவரது குலகுருவே வித்யாரண்யர். இந்த வித்யாரண்யர் ஆனைக் குந்தியிலிருந்து துங்கபத்திரையைக் கடந்து தென்பக்கமாக நடந்திருக்கிறார் ஒரு நாள். அந்த இடத்திலே துரத்திவரும் வேட்டை நாய்களையே ஒரு முயல் எதிர்த்துப் போராடியதைப் பார்த்திருக்கிறார். அப்படி நிகழ்ந்தது அம்மண்ணின் மகிமையே என்பதையும் உணர்ந்திருக்கிறார். அந்த இடத்தையே வீரகேrத்திரம் என்று அழைத்திருக்கிறார். அங்கேயே ஒரு ராஜ்யத்தை ஹக்காவையும் அவரது சகோதரர் புக்காவையும் கொண்டு நிர்மாணித்திருக்கிறார். பா மி னி சுல்தான்களிடையே இருந்த மனக்கசப்பும் குரோதமும் இந்த சின்னராஜ்யம் விரிவடைய வகை செய்திருக்கிறது. அதனால் இந்த ராஜ்யம் வெற்றிமேல் .ெ வ ற் றி கண்டிருக்கிறது. வித்தியாரண்யரது ஆ. சி ேய | டு ஆரம்பிக்கப்பட்ட ராஜ்யத்தை வித்யாரண்ய நகரம் என்று அழைத்திருக் கின்றனர் முதலில். அதுவே நாளடைவில் விஜய நகரம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த விஜயநகர மன்னர்களில் தலைசிறந்தவராக விளங்கியவர், கிருஷ்ணதேவராயர், அவர் ஆட்சியில் விஜய நகர சாம்ராஜ்யம் மிக்க புகழுடன் விளங்கியிருக்கிறது. மகம்மதியர்கள் எல்லாம் ஒடுங்கியிருந்திருக்கின்றனர். 1509-ம் ஆண்டு முதல் இருபது வருஷ காலம் இவர் ஆண்டிருக்கிறார். மைசூர் ஒரிஸ்ஸா முதலான நாடுகளை ஆயும் வென்றிருக்கிறார். தெற்கே மதுரை வரையிலும்