பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 ஒரு மகன் பிறந்தால் பாண்டுரங்கனுக்கு ஒரு தங்க அரை ஞான் பூட்டுவதாக பிரார்த்தனையே செய்திருக்கிறார். அவர் பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் பாண்டுரங்கன். தன்னுடைய பிரார்த்தனையை நிறை. வேற்ற அந்த செல்வரும் எண்ணியிருக்கிறார். அந்த ஊரில் தங்க வேலையில் பிரபலமாயிருந்த நரஹரி சேரனார் என் னும் பத்தரை அணுகியிருக்கிறார்: அந்தப் பத்தரோ நல்ல சிவபக்தர். சிவனை மறவாதசிந்தையர் புண்டரீகர் எப்படிப் பெருமாளைத் தவிர வேறு எந்த தெய்வங்களைப் பார்க்க மாட்டேன் என்ற வைராக்கியத்தில் இருந்தாரோ அதைப் போல இவர் சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத் தையும் கண்ணெடுத்துப் பார்க்க மாட்டேன் என்று வைராக்கியத்தில் இருக்கிறவர். ஆதலால் இவர் பாண்டு ரங்கனது இடையின் அளவை யாராவது எடுத்துக் கொணர்ந்து தந்தால்தான் அரைஞான் செய்து தருவ: தாகச் சொல்கிறார். செல்வச் சீமானும் எப்படியாவது அரைஞான் செய்து தந்தால் போதும் என்று பாண்டு ரங்கனது இடையின் அளவை எடுத்து வந்து கொடுத் திருக்கிறார். நரஹரி சேரனாரும் அரைஞான் செய்து கொடுக்கிறார். அதை எடுத்துக் கொண்டு பாண்டு ரங்கன் சந்நிதிக்குச் சென்றால் அது அளவில் குறைகிறது. திரும்பவும் அளவெடுத்து திரும்பவும் அரைஞான் செய்யச் சொல்கிறார். இந்த தடவையோ அரைஞான் மிகவும் பெரியதாகி விடுகிறது. தனவந்தர் நரஹரி சேரனாரை நீர் எப்படியாவது கோயிலுக்கு வந்து நீரே அளவெடுத்துச் செய்து தர வேண்டும். என்கிறார்.என்ன சங்கடம் இவரோ: பாண்டுரங்கனைக் கண்ணுல் பார்க்க முடியாதுஎன்ற வைராக். கியம் உடையவர். கடைசியில் தனவந்தர் விருப்பப்படியே தன் கண்களைக் கட்டிக்கொண்டு கோயிலுள் நுழைந்து பாண்டுரங்கனது இடையை அளவெடுக்கிறார். தடவித். தடவிப் பார்க்கிறார். என்ன அதிசயம்! நரஹரி சேரனார் கைகளுக்கு அப்போது தட்டுப்பட்டவர் ஜடாமருடதாரி யான சிவ பெருமானே.இடையிலே அணிந்த புலித்தோலும்,