பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தேவியரின் ஞாபகார்த்தமாக இந்த நகரை முதலில் நிர்மானித்திருக்கிறார். அந்தப் பழைய நகரத்தைச் சுற்றி ஒரு புதிய பட்டணம் தோன்றியிருக்கிறது. அதுவே ஹாஸ்பெட் என்று பெயர் பெற்றிருக்கிறது. ஹாஸ் பெட்டில் பார்க்க வேண்டியவை ஒன்றும் இல்லை. ஆதலால் விரைவாகவே காரை ஒட்டலாம் கிழக்கே இரண்டு மைலில் நாகனஹல்லி என்று இன்று வழங்கும் நாகலாபுரம் இருக்கிறது. இந்த நாகலாபுரமும் கிருஷ்ணதேவராயர் தன் தா யார் நாகலாதேவியின் ஞாபகார்த்தமாக நிர்மானித்ததே. இந்த நாகலாபுரம்தான் மேற்கிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கு ஹம்பியில் நுழைவதற்கு ஒரு வாயிலாக அமைந்திருக்கிறது. இந்த வழியில் செல்லும் போதுதான் ஹாஸ்டெட் ஸ்டேஷனுக்கு ஒரு மைல் துாரத்தில் அனந்தசயனரது கோயில் ஒன்றிருக்கிறது. அங்குள்ளவர்களிடம் அனந்தசயனரது கோயில் எங்கிருக் கிறது என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. அஞ்சன குடி எங்கிருக்கிறது என்றால் கோயிலைக் காட்டுவார்கள். கோயில் பெரிய கோயில்தான். அங்குதான் நீண்டதொரு சயனமேடையில் அனந்தர் சயனக்கோலத்தில் இருப்பார். இக்கோயிலின் விதானம் செங்கல்லும் கண்ணாம்பும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது, கட்டிடக்கலையில் ஒரு அதிசயம் என்று கருதப்படுகிறது இக்கோயிலை கிருஷ்ணதேவராயர் 1524-ல் கட்டி முடித்தார் என்று அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள அ ன ந் த. சயனரைவிடப் பெரியதொரு அனந்த சயனரை சிற்பி ஒருவன் உருவாக்கியிருக்கிறான். அதனை உருவாக்கிய இடமான ஹோலாலு என்ற இடத்திலிருந்து எடுத்து வர முடியாது போயிருக்கிறது என்று தெரிகிறது. வராதவரைப் பற்றிக் கவலைப்படாமல் வந்து படுத்திருப்பவரைத் தரிசித்து விட்டு மேல் நடக்கலாம். நடக்கும் சாலையில் நாலாவது மைல் கடந்ததும் இடது கைப் பக்கம் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. எண்கோண வடிவில் கல்லாலேயே கட்டிய பெரிய கிணறு அது. உள்ளே இறங்க வசதியானப்