பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 படிகள் கட்டியிருக்கிறது. இதனை சூளைபாவி என் கின்றனர். இக்கிணற்றை வெட்டிக்கட்டியவர் ஒரு நடன மாது என்கின்றனர். இக்கிணற்றின் பக்கத்தில் மல்லப்பன் குடி என்று ஒரு கோவில். இக்கோயிலையும் கிருஷ்ண தேவராயரே 1510-ல் கட்டியிருக்கிறார். நாலரைமைல் கடந்ததும் கதிராம்புரம் திரும்பும்பாதை ஒன்றிருக்கிறது. அந்தப் பாதையின் பக்கத்தில் மூன்று சமாதிகள் இருக் கின்றன. அவை முஸ்லீம்களின் சமாதிகள். யார் யாரு டைய சமாதி என்று தெரியவில்லை. இந்த சமாதி களுக்குக் கிழக்கே அரை மைல் தூரத்திலே ஹேமசு.டம் என்னும் சிறிய மலைச் சிகரம் ஆரம்பிக்கிறது. அங்கு அந்த ஹேம கூடத்தின் சிகரத்தில் இரண்டு பாதங்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன. அவைகளைச் சுற்றி ஒரு பாம்பையும் செதுக்கியிருக்கிருன் சிற்பி. பாதங்கள் நாராயணனது பாதங்கள் என்றும், அப்பாதங்களைச் சுற்றிக் கிடக்கும் பாம்பு ஆதிசேஷன் என்றும் தெரிகிறது. ஆதலால் அந்த விஷ்ணு பாதத்தை வணங்கிவிட்டு மேற்செல்லலாம். இந்த ஹேமகூடத்தின் வழியாகத்தான் நாம் ஹம்பி நகரில் நுழையவேணும். இனி ஹம்பியில் நுழையும்போது நம்மை வரவேற் பவர் இரண்டு பெரிய பிள்ளையார்கள் தாம். சாலைக்கு மேல்புறம் நான்கு பக்கம் திறந்திருக்கும் ஒரு பெரிய மண்டபத்திலே விக்னேஸ்வரர். அவரைத்தான் சசிவேகல் கணேசர் என்கின்றனர். அவரை கடுகு விநாயகர் என்று தமிழில் சொல்லலாம். ஆனல் கடுகைப் போல் சிறிய வடிவினர் அல்ல. நல்ல பெரிய வடிவம். ஒருவேளை கடுகு நிறத்து கணேசர் என்பதற்காகத்தான் சசிவேகல் கணேசர் என்கிருர்களோ என்னவோ. அடுத்தாற் போல் ளள்.உ பெரிய கோயிலில் உள்ள பெரிய விந்ாயகரைக் கடலைக் கல் விநாயகர் என்று அழைக்கிருர்கள். இவரது வடிவமும் பெரிதே. இவ்வடிவத்தின் பல பாகங்கள் சிதைந்திருக் கின்றன. இந்த இரண்டு விநாயகரையும் வணங்கி விட்டு