பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெல்வேலி வண்ணுர்பேட்டையில் டி.கே. சி. அவர்கள் தமது வீட்டிலுள்ள வட்டமான தொட்டிக் கட்டில், ஞாயிறுதோறும் நடத்தி வந்த வட்டத் தொட்டி என்னும் இலக்கிய இயந்திரத்தின் மெயின் ஸ்பிரிங்' யார் என்ருல், எவ்விதத் தயக்கமும் இன்றி பாஸ்கரன் தான்' என்று உறுதியோடு சொல்லிவிடலாம். வட்டத் தொட் டி' என்ற கவிமொழிக்குப் பொழிப்புரை, பதவுரை, கருத்துரை, விரிவுரை எல் லாமே என் அருமை நண்பர் பாஸ்கரத் தொண்டை ம்ான்தான் என்று நான் சொல்லுவேன். ஆகா! எப்பேர்ப்பட்ட மனிதர் எப்பேர்ப்பட்ட நண்பர் எப்பேர்ப்பட்ட ரசிகர்! அவருக்கு ஈடாக வேறு ஒருவரில்லே வேறு எவரும் அவருக்கு ஈடில்லை. எத் தனையோ பேருடன் நெருங்கிப் பழகியுள்ளவனுகிய நான் தான் சொல்லுகிறேன், பாஸ்கரன் ஓர் ஒப்பற்ற மனிதர்' டி. கே. சி.யின் வீட்டில் உள்ள தாழ்வாரத்தில் தண் பர்கள் பலர் கூட்டமாகக் குழுமியிருக்கும்போது எங்கி ருந்தாவது கல கலப்புக் கேட்டால், நிச்சயம் அங்கே பாஸ்கரன்தான் இருப்பார் அதிர்வேட்டுச் சிரிப்பு கிளம்புகிறது என்ருல், அது வேறு யாருமில்லை, தொண் டைமான்தான்! எனக்கு பலரைத் தெரியும். க்ளார்க்காகப் பணியைத் தொடங்கி யிருப்பார்கள். அப்போது நம்மிடம் பழகுகிற முறை ஒருமாதிரி இருக்கும். ஹெட்க்ளார்க் ஆவார் கள். சுருதி மாறும். பிறகு அதிகாரியாக ஆகும் போது . ஆளே மாறி விடுவார்! தோரணைகள், நன்றியுணர்வுகள் எல்லாமே வேறு விதமாக இருக்கும். இப்படிப்பட்ட