பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重53 படிக்குகை. இக்குடைவரை ஊருக்கு வடமேற்கு மூலையில் இருக்கிறது. குடைவரை என்பதினாலே மலையைக் குடைந்து அமைத்த கோயில் என்பதை தெரிந்து கொள்ளலாம் தானே. இக்குடைவரையில் முன்னே ஒரு மண்டபம் இருக்கிறது. அதை அடுத்து ஒரு கருவறை. முகமண்டபத்திற்கு முன்னால் இருப்பது இரண்டு தூண்கள். எல்லாம் மலையைக் குடைந்து செதுக்கி அமைக்கப் பட்டவை. இந்த மண்டபத்தின் இரு முனைகளிலும் இரண்டு அறைகள். அங்குதான் அழகழகான சிற்ப வடிவங்கள். இடப்பக்கத்தில் பத்து திருக்கரங்களோடு கூடிய நடராஜர். இதுபோன்ற சந்தியாதாண்டவமூர்த்தியை நான் தமிழ் நாட்டில் பார்க்கவே இல்லை. இவர் அளவில் பெரியவள் என்பது மட்டும் அல்ல அழகிலுமே உயர்ந்தவர் தான். தாண்டவருக்கு இடப்புறம் பார்வதி. அவளை ஒட்டி குதிரைத் தலையுடன் ஒரு பெண். இது யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. வலப்புறம் மோதகம் ஏந்திய கைகளுடன் விநாயகர். சுவரை ஒட்டிய தூண் ஒன்றில் அர்த்தநாரியின் வடிவம். இதற்கு எதிர்ப்புறம் பாம்பொன் றின் வாலைத் தூக்கிப் பிடித்து நிற்கும் குலபாணி. அடுத்த பக்கத்தில் ஹரிஹர வடிவம். இன்னும் இங்குள்ள வராகர் நல்ல காத்திரம் உள்ளவராகவும், கம்பீரம் நிறைந்தவராகவும் இருக்கிறார். நமக்குத்தான் தெரியுமே. சாளுக்கியர் கொடியிலே வராகம்தான் எழுதப்பட்ட டிருக்கும் என்று. சொல்லப் டோனால் வராகரே சாளுக்கிய மன்னர்களின் வழிபடு கடவுளர் போலும். வராகருக்கு அடுத்தபடியாக துர்க்கை வழிபாடு சாளுக்கியரிடையே சிறத். திருக்கிறது. அதனாலேயே துர்க்கைக்கு என்று ஒரு தனிக் Gಳ್ತು. இன்னும் இந்தக் குடைவரையிலும் ஒரு மகிஷ. மர்த்தினியின் சிற்ப வடிவம். அவள் ஏந்தியுள்ள திரிசூலம் மஹிஷாசுரன் உடலில் பாய்ந்து வெளி வந்திருக்கிறது. இன்னும் ஒரு அதிசய வடிவம். அது சிவபெருமானு' டையது. பக்கத்தில் பார்வதியும் பிருங்கி முனிவரும் இருக்கின்றார்கள். இவரது சடாமகுடத்திற்கும் மேலே