பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பீஜப்பூரிலிருந்து நான்கு மைல் துரத்தில் தராவி' என்று ஒரு கிராமம் இருக்கிறது. இங்கேதான் குமார வால்மீகி அவதரித்திருக்கிறார் அவரே கன்னடத்தில் ராமாயணம் எழுதியவர். இக்கிராமத்தில் அழகிய, நரசிம்மரது கோயில் இருக்கிறது. இக்கிராமத்திற்குச் சென்றால்,ஏதோ மசூதிகளையும் சமாதிகளையும்மாத்திரம் பார்த்தோம் என்றில்லாமல் ஒரு கோயிலையும் பார்த். தோம் என்ற திருப்தியுடனேயே திரும்பலாம். இந்திய நாட்டின் ஏழு அதிசயங்கள் என்று கணக்கிடுப வர்கள் பீஜப்பூர் கோல்கும்பலையும் ஒன்றாகக் கணக்கிட் டிருக்கிறார்கள் என்றால், அந்த கட்டிடத்தினை நாம் காண வேண்டாமா? அதற்காகவே இவ்வூருக்கும் நமது விஜயம்.